பஞ்சுபோன்ற ராகி இடியாப்பம்! ஆவியில் வெந்த கேழ்வரகு இடியாப்பம் தேங்காய் பாலுடன் செம ருசி!

Subscribe to Oneindia Tamil

Soft Ragi Idiyappam Recipe In Tamil: பச்சரிசி மாவில் இடியாப்பம் செய்து செய்து போர் அடித்துவிட்டதா? அரிசியை கண்டு உடல்நலத்திற்கு பாதிப்பு வருமோ என அஞ்சுகிறீர்களா? அப்படியென்றால் கேழ்வரகில் இடியாப்பம் செய்து பாருங்களேன்.

இடியாப்பம் என்றாலே பலருக்கு இடியாப்ப சிக்கல்தான். செய்ய தெரியாது. அப்படியே செய்தாலும் இடியாப்பமே அதை இடியாப்பம்னு சொன்னால் கூட நம்பாத அளவுக்கு இருக்கும். ஆனால் இருப்பதிலேயே இடியாப்பம் செய்வதுதான் ஈஸி என்கிறார்கள்.

ராகி அல்லது கேழ்வரகு மாவில் இடியாப்பம் செய்யும்போது அது சில நேரங்களில் மிகவும் கடினமாகிவிடும் என்ற பயம் பலருக்கும் பொதுவாக உண்டு. ஆனால் சரியான அளவில் சுடுதண்ணீர் சேர்த்து மாவைப் பிசைந்தால் பஞ்சு போன்ற மென்மையான இடியாப்பத்தை மிக எளிதாக உங்கள் வீட்டிலேயே தயார் செய்துவிடலாம். எல்லாவற்றுக்கு மேல் இடியாப்பம் எவ்வளவு நேரமானாலும் மெத்து மெத்தென பஞ்சு போல் இருக்கும்.

Ragi Idiyappam Recipe

தேங்காய்ப்பால் அல்லது காரசாரமான காய்கறி குருமாவுடன் இந்த ராகி இடியாப்பத்தை சேர்த்துச் சாப்பிடும்போது அதன் சுவை உங்கள் நாவிலேயே நீண்ட நேரம் தங்கும். மிகக் குறைந்த நேரத்தில் ஆவியில் வேகவைத்து எடுக்கப்படும் இந்த உணவு செரிமானத்திற்கு மிகவும் நல்லது மற்றும் வயிற்றுக்கு இதமானது. இந்த இடியாப்பத்திற்கு ஆட்டுக்கால் பாயாவும் பர்ஃபெக்ட் காம்பினேஷன். இதை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு (கேழ்வரகு மாவு) - 2 கப்
  • தண்ணீர் - 2.5 கப் (தேவைக்கேற்ப)
  • நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • துருவிய தேங்காய் - அரை கப்

செய்முறை விளக்கம்

  • முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவைச் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • அடுத்து கொதிக்கும் தண்ணீரை வறுத்த ராகி மாவில் சிறிது சிறிதாக ஊற்றி ஒரு கரண்டியால் கட்டிகள் இல்லாமல் மெதுவாகக் கிளற வேண்டும்.
  • பிறகு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் மாவை மென்மையாகப் பிசைந்து இடியாப்ப அச்சில் இடுவதற்குத் தகுந்த பதத்தில் தயார் நிலையில் வைக்கவும்.
  • இறுதியாக இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை இடியாப்பமாகப் பிழிந்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான ராகி இடியாப்பம் தயார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+