Tender Coconut Payasam: நாக்கில் பட்டதுமே சொய்ன்னு வயிற்றுக்குள் செல்லும் பாயாசம்! கோடைக்கு ஏற்றது!
சென்னை: கோடை வெயில் வாட்டி எடுக்கும் காலங்களில், வழக்கமான பால் பாயாசத்திற்கு மாற்றாக, இயற்கையின் கொடையான இளநீரைக் கொண்டு செய்யப்படும் இந்த பாயாசம் ஒரு சிறந்த தேர்வாகும். இது நாவிற்குச் சுவையைத் தருவதோடு மட்டுமல்லாமல், உடலை உடனடியாகப் புத்துணர்ச்சி பெறச் செய்கிறது.
பொதுவாகவே இளநீரை வெயில் காலங்களில் குடிப்பது வழக்கம். இது உடல் சூட்டை தணிக்கும். வயிற்றுக்கும் நன்மையை தரும். அந்த இளநீரை கொண்டு ஒரு பாயாசம் செய்தால் அமிர்தமாக இருக்கும். அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
இளநீர் வழுக்கை: 2 கப் (பொடியாக நறுக்கியது)
இளநீர்: 1 கப்
பால்: அரை லிட்டர் (திக் பால்)
சர்க்கரை அல்லது வெல்லம்: தேவையான அளவு
தேங்காய்ப் பால்: 1 கப் (முதல் பால்)
ஏலக்காய்த் தூள்: ஒரு சிட்டிகை
முந்திரி, திராட்சை: நெய்யில் வறுத்தது
செய்முறை விளக்கம்
பாலைக் காய்ச்சுதல்: முதலில் அரை லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அது பாதியாகக் குறையும் வரை நன்றாகச் சுண்டக் காய்ச்சவும்.
வழுக்கை அரைத்தல்: எடுத்து வைத்துள்ள இளநீர் வழுக்கையில் பாதியை மிக்சியில் போட்டு, சிறிது இளநீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும். மீதி பாதியைச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கலத்தல்: சுண்டக் காய்ச்சிய பாலில் சர்க்கரை சேர்த்து கரையவிடவும். பின், அரைத்து வைத்துள்ள இளநீர் விழுது மற்றும் நறுக்கி வைத்துள்ள வழுக்கை துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கிளறவும்.
தேங்காய்ப் பால் சேர்த்தல்: அடுப்பை அணைத்துவிட்டு, இறுதியாகத் தேங்காய்ப் பால் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். (அடுப்பை அணைத்த பின் தேங்காய்ப் பால் சேர்ப்பது பால் திரிந்து போகாமல் இருக்க உதவும்).
தாளிப்பு: நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்துப் பரிமாறவும். இதனைச் சூடாகவும் அருந்தலாம் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பருகலாம்.

இளநீர் பாயாசத்தின் உடல்நலப் பலன்கள்
இளநீர் பாயாசம் வெறும் இனிப்பு வகை மட்டுமல்ல, இதில் ஏராளமான மருத்துவக் குணங்களும் நிறைந்துள்ளன:
உடனடி ஆற்றல்: இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் (Electrolytes) உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாட்டை நீக்கி, உடனடி புத்துணர்ச்சியைத் தருகிறது.
செரிமானத் திறன்: தேங்காய்ப் பால் மற்றும் இளநீர் வழுக்கை வயிற்றில் உள்ள புண்களை (Alcer) ஆற்றும் வல்லமை கொண்டது. இது செரிமான மண்டலத்தைச் சீராக்குகிறது.
உடல் குளிர்ச்சி: இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மை கொண்ட இளநீர், கோடையில் ஏற்படும் அதிகப்படியான உடல் சூட்டைத் தணிக்கிறது.
சரும ஆரோக்கியம்: இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க உதவுகிறது.
சிறுநீரக ஆரோக்கியம்: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்க உதவுகிறது.
முக்கியக் குறிப்பு: சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாகக் கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரையை மிதமான அளவில் சேர்த்துக் கொள்ளலாம். இனிப்பு சேர்க்காவிட்டாலும் குடிக்கலாம். உடலுக்கு நல்லது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications