Peerkangai Chutney: பீர்க்கங்காயை வைத்து பொரியல், கூட்டு தெரியும்! சட்னி செய்வீங்களா?
Peerkangai chutney: பீர்க்கங்காயில் பொரியல், கூட்டு செய்திருக்கிறோம், சட்னி ரெசிபியை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பீர்க்கங்காயை வைத்து ஒரு சட்னியை எப்படி செய்வது என்பதை பார்க்கலாமா?

நீர்க்காய்களில் முக்கியமானது பீர்க்கங்காய். இந்த காய் உடல் எடையை குறைக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. வெயில் காலத்தில் இந்த காயை சாப்பிட்டால் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்.
இதில் பொரியல், கூட்டு செய்யலாம். இந்த காயில் சட்னி செய்யலாம். இது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய்- 1 கப்
வேர்க்கடலை- கால் கப்
எண்ணெய்- 2 டீஸ்பூன்
இஞ்சி- 1 இன்ச்
புளி- சிறிது
காய்ந்த மிளகாய்- 2, 3
உப்பு- தேவையான அளவு
தண்ணீர்
தாளிக்க
கடுகு- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிது
பெருங்காயம்- கால் டீஸ்பூன்
செய்முறை
வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி, இஞ்சி, புளி, சிவப்பு மிளகாய் போட்டு வதக்கவும்.
அதில் பீர்க்கங்காயை சேர்த்துக் கொள்ளலாம். உப்பை சேர்த்து கொள்ளவும்.
இதை 2 நிமிடங்கள் வதக்கி பீர்க்கங்காய் வேகும் வரை வதக்கவும்.
பின்னர் அதை ஆற வைத்து தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டினால் சுவையான சட்னி ரெடி.












Click it and Unblock the Notifications