Aval Vada: வெள்ளை அவலை பால்+ சர்க்கரை போட்டு சாப்பிட்டு போரடிக்கிறதா? அவல் வடை செய்யலாமா?
சென்னை: "அவலை" (White Aval , Poha) வைத்து பால், சர்க்கரை போட்டு சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்கிறதா? அப்படியென்றால் அவல் வடை செய்யலாமா? இதை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

வெள்ளை அவல், சிவப்பு அவல் என இரண்டு இருக்கின்றன. இவை இரண்டிலுமே சத்துக்கள் நிறைய இருக்கின்றன. இவை உடல் எடை குறைப்புக்கு உதவும். இவற்றை பாலில் ஊறவைத்து சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதை சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இன்னும் சிலர் இதை அப்படியே சாப்பிடுவார்கள். ஒரு சிலர் இந்த அவலில் ஒருவித லட்டு செய்து சாப்பிடுவார்கள். சர்க்கரை போட்டிருப்பதால் இதெல்லாம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட முடியாது. அவர்களுக்கு ஒரு சூப்பரான வடை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
வெள்ளை அவல்- அரை கப்
வெந்நீர் - அரை கப்
அரிசி மாவு- 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு- 2 டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
பச்சை மிளகாய்- 1
கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு
வெங்காயம் - 1 (நறுக்கியது)
புளித்த தயிர் - கால் கப்
எண்ணெய் - பொறிக்க
பெருங்காயம் சிறிது
முட்டை கோஸ் - கால் கப்
செய்முறை
வெள்ளை அவலை நன்கு கழுவிவிட்டு அதில் அரை கப் வெந்நீர் ஊற்றி ஊறவிடவும். அவல் நன்கு சாஃப்ட்டானதும் தண்ணீரை வடித்துவிடவும்.
தண்ணீரை வடித்துவிட்டு பிசைந்து கொள்ளுங்கள். அரிசி மாவு, கடலை மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, முட்டை கோஸ், வெங்காயம், பெருங்காயம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், இந்த கலவையை சிறிது எடுத்து வடை போல் தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெய்யில் போட்டு பொன்னிறம் வரும் வரை பொறித்தெடுக்கவும். இதற்கு எந்தவித சட்டினியும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications