Veg Pulao Recipe: ஈஸியான வெஜ் புலாவ் இப்படி சமைச்சு பாருங்க.. குழந்தைகளுக்கான சூப்பர் லஞ்ச் ரெசிபி
How to make Veg Pulao Recipe: குழந்தைகளுக்கு இன்னைக்கு ஸ்கூலுக்கு என்ன செய்து கொடுத்து அனுப்பலாம் என்பது தான் ஒவ்வொரு தாய்மார்களின் கவலையாக இருக்கும். ஹெல்தியாக கொடுக்க வேண்டும். அதேநேரம் காலையில் சமைக்க ஈஸியாகவும் இருக்க வேண்டுமா. அப்ப உங்களுக்கான ரெசிபிதான் இது. வாங்க சுவையான வெஜ் புலாவ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வெஜிட்டபிள்ஸ் என்றாலே பல குழந்தைகளும் இப்போது பயப்படுகின்றனர். அதிலும் சில குழந்தைகள் காய்கறிகளாக இருந்தாலும் அதை பொறித்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், பொறித்த உணவை அதிகமாகக் கொடுப்பது அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல. உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் சில்லியைத் தவிர என் குழந்தை எதுவுமே சாப்பிடறது இல்லைனு கவலைப்படும் மாமீஸ்கள் தான் இப்போது அதிகம்.
சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு காய்கறிகளை கொடுத்து பழக்குவது மிகுந்த அவசியமாகும். காய்கறிகள் சாப்பிடுவதால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஆற்றல் திறனும் அதிகரிக்கும். ஹெல்தியாகவும், காலையில் சமைக்க ஈஸியாகவும் இருக்கும் வெஜ் புலாவ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 4
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
கேரட்
பீன்ஸ்
பச்சை பட்டாணி
காலிஃபிளவர்
சோயா
உப்பு தேவையான அளவு
பிரிஞ்சி இலை
அன்னாசிப்பூ
கல் பாசி
புதினா - 2 கைப்பிடி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1\4ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1\4ஸ்பூன்
அரைக்க:
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு
வெஜ் புலாவ் செய்வது எப்படி?

முதலில் சீரக சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
2. அடுப்பில் குக்கரை வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
3. எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை, அன்னாசிப்பூ சேர்க்கவும். பின்னர், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4. பின்னர், அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
5. தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
6. சுத்தம் செய்து வைத்த புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வக்கவும். அதில், கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
7. அதில், காய்கறிகளையும், தயிரையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர், சீரக சம்பா அரிசியைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் விடவும். சூடான சுவையான வெஜ் புலாவ் ரெடி.












Click it and Unblock the Notifications