Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weight loss Kanji: ஜிம்முக்கு போகாமல்! உடல் எடையை குறைக்கணுமா? இந்த கஞ்சி குடிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருப்பு கவுனி அரிசியை வைத்து வெயிட் லாஸ் பவுடர் தயாரிக்கலாமா? என்னென்ன பொருட்கள் தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும் மாதம் 2 கிலோவாவது எடை குறையும் என்கிறார்கள்.

அந்த காலத்தில் ராஜாக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த அரிசிதான் கருப்பு கவுனி அரிசி. இந்த அரிசி சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, இதயத்தை பாதுகாக்க, கண்களின் ஆரோக்கியத்திற்காக, ஆஸ்துமா பிரச்சினை நீங்க, உடலில் உள்ள கழிவுகள் வெளியேறவும் இது உதவுகிறது.

recipes weight loss

இந்த அரிசி, ரத்த அழுத்த பிரச்சினையையும் நீக்குகிறது. கருப்பு கவுனி அரிசியை உணவில் சேர்க்கும் போது ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதலைத் தடுக்கும். கருப்பு கவுனி அரிசி புற்றுநோயை எதிர்த்து போராடவும் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கவும் இது உதவுகிறது.

இந்த அரிசியை கொண்டு பொங்கல், இட்லி, தோசை உள்ளிட்டவை செய்யலாம். இது கருப்பாக இருப்பதால் சிலருக்கு இதை சாதமாக வடித்து சாப்பிட பிடிக்காது. அதனால் கஞ்சி வைத்து குடிக்கலாம். இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதையும் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கருப்பு கவுனி அரிசி- 1 கப்
பயத்தம் பருப்பு- 1 கப்
கொள்ளு- முக்கால் கப்
சீரகம்- 1 டீஸ்பூன்
மிளகு- 1 டீஸ்பூன்

செய்முறை

கருப்பு கவுனி அரிசியை வெறும் வாணலியில் வறுக்கவும். அது போல் பயத்தம் பருப்பு, கொள்ளு, சீரகம், மிளகு உள்ளிட்டவைகளையும் வறுத்துக் கொள்ள வேண்டும்.

இவற்றை ஆற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். கஞ்சி செய்ய ஒன்றரை டம்ளர் தண்ணீரை சூடு செய்ய வேண்டும்.

2 ஸ்பூன் கஞ்சி மாவை எடுத்து தண்ணீரில் கரைத்து, அந்த வெந்நீரில் ஊற்றி கைவிடாமல் கலக்கவும். அது கஞ்சி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

பின்னர் ஆறியதும் மோர் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து கூழ் போலவோ இல்லை கஞ்சியாகவோ தினமும் குடித்து வரலாம். கொள்ளு உடல் எடையை குறைக்கும். பயத்தம் பருப்பு புரத சத்தை கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+