சித்ரா பவுர்ணமி! திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்! கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்கிறார்கள். இந்தநாளில் அண்ணாமலையாரை நினைத்து கிரிவலம் வந்தால் புண்ணியம் தரும் என்பது ஐதீகம்.
பஞ்சபூதங்களில் அக்னி தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். நினைத்தாலே முக்தி தரும் தலம் என்ற பெருமைக்குரியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல கோடி பக்தர்கள் இந்த அண்ணாமலையாரை தரிசித்து வருகிறார்கள்.

திருவண்ணாமலையில் சிவபெருமானே மலையாக இருப்பதாக நம்பிக்கை. அதனால் கோயிலை சுற்றுவது போல் மலையை வலம் வருகிறார்கள். சுமார் 14 கீ.மீ. தூரம் கொண்ட திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8 லிங்கங்கள் உள்ளன. இவற்றிற்கு அஷ்டலிங்கங்கள் என பெயர்.
இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய லிங்கங்களை தரிசித்து ஓம் நவசிவாய என 5 எழுத்து மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மலை 260 கோடி ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் வந்தாலும், கார்த்திகை தீபம், சித்ரா பவுர்ணமி உள்ளிட்டவைகளுக்கு லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் மேற்கொள்வர்.
அந்த வகையில் இந்த ஆண்டு இன்று சித்ரா பவுர்ணமியாகும். ஆண்டுதோறும் 12 பவுர்ணமிகளிலும் விரதம் இருந்து கிரிவலம் வந்த பலனை ஒரே நாளில் தரக் கூடியது இந்த சித்ரா பவுர்ணமியாகும். இந்த நாளில் கிரிவலம் செல்வதால் செல்வச் செழிப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது என்பதை பார்க்கலாம்.
பவுர்ணமி திதி ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 9.51 மணிக்குத் தொடங்கி இன்று இரவு 11.07 மணிக்கு முடிகிறது. கிரிவலத்தை தொடங்கும் நேரம் நேற்று இரவு 9.12 மணிக்கு, முடிவடையும் நேரம் இன்று இரவு 10.52 மணியாகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications