சீடை, முறுக்குனு உழைப்பெடுத்து செய்றீங்களா? இதுக்கு பதில் இந்த ஒரு பொருளே கிருஷ்ணாவுக்கு போதுமே!
சென்னை: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அவருக்கு படைப்பதற்காக சீடை, முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பலகாரங்களை செய்வதற்கு பதில் இந்த ஒரே ஒரு பொருளை வைத்தாலே போதும் வெண்ணெய் பிரியன் மிகவும் மகிழ்ச்சி அடைவான்.
ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி ஆகியவை அபூர்வமாக ஒரே நாளில் வருகின்றன. அதாவது செப்டம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்று அதிகாலை 2.09 மணிக்கு அஷ்டமி திதி தொடங்கி நாளை இரவு 11.46 மணி வரை உள்ளது.
அது போல் அதிகாலை 12.57 மணிக்கு தொடங்கும் ரோகிணி நட்சத்திரம் இரவு 11.22 மணி வரை நீடிக்கிறது. அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வருவதால் கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.
காலை 9.15 மணி முதல் 10.20 மணி வரையும் மதியம் 12.15 மணி முதல் 1.30 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பூஜை, வழிபாடு நடத்தலாம்.
கிருஷ்ணரின் படம் அல்லது சிலைக்கு மாலை அணிவித்து மலர்களால் அலங்கரித்து, பூஜை செய்யலாம். கிருஷ்ணருக்கு நெய்வேத்திய பொருளாக வெல்ல சீடை, கார சீடை, அதிரசம், முறுக்கு, மிக்ஸர் உள்ளிட்ட பொருட்களை வீட்டிலேயே செய்வதுண்டு.
அப்போதெல்லாம் கிருஷ்ண ஜெயந்திக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பிலிருந்தே பலகாரங்களை செய்ய தொடங்குவர். ஆனால் தற்போது பிரபல கடைகளில் வெல்ல சீடை, கார சீடை, முறுக்கு உள்ளிட்டவைகளை காசு கொடுத்து வாங்கி படைக்கிறார்கள்.
இல்லாவிட்டால் வீடுகளில் சிலர் இந்த பலகாரங்களை மொத்தமாக ஆர்டர் எடுத்து செய்து தருவதும் உண்டு. அங்கு பணம் கட்டி ஆர்டர் கொடுத்துவிட்டால் பட்சணங்கள் வந்துவிடும்.
கிருஷ்ணர் எப்போதும் எளிமை விரும்பி. எனவே இதையெல்லாம் செய்து படைப்பதை விட ஒரு துண்டு வெண்ணெய், ஒரு கைப்பிடி அவலை (Aval) வைத்து படைத்தால் போதுமானது. அத்துடன் நாகப்பழம் என்கிற நாகப்பழம் (Jamun Fruit) கிடைத்தால் உன்னதம்!


Click it and Unblock the Notifications
