Krishna Jayanthi 2026: நாளை கிருஷ்ண ஜெயந்தி! பூஜை செய்ய நல்ல நேரம் எது? என்னவெல்லாம் படைக்கலாம்?
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படும் நிலையில் கோகுலத்து கோபாலனுக்கு பிடித்த பட்சணங்களை எப்போது படைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஆதம் ஞான மையம் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: 2026 ஆம் ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி ஆகியவை அபூர்வமாக ஒரே நாளில் வருகின்றன.

அதாவது நாளை செப்டம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 2.09 மணிக்கு அஷ்டமி திதி தொடங்கி நாளை இரவு 11.46 மணி வரை உள்ளது.
அது போல் அதிகாலை 12.57 மணிக்கு தொடங்கும் ரோகிணி நட்சத்திரம் இரவு 11.22 மணி வரை நீடிக்கிறது. அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வருவதால் நாளை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
பூஜை செய்ய உகந்த நேரம்
காலை 9.15 மணி முதல் 10.20 மணி வரையும் மதியம் 12.15 மணி முதல் 1.30 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பூஜை, வழிபாடு நடத்தலாம்.
கிருஷ்ணருக்கு பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் ஆகியவற்றை வைத்து வழிபடலாம். கிருஷ்ண எளிமையை விரும்புபவர். அவருக்கு பிடித்த அவலை கொண்டு பாயாசம், அவல்- சர்க்கரை- தேங்காய் கலவை செய்தும் வழிபடலாம்.
வீட்டிற்குள் கிருஷ்ணர் பாதம் வரைய வேண்டும், அப்போது "கோவிந்தா, கோபாலா, மாதவா" என உச்சரித்தல் வேண்டும். அது போல் பெண் குழந்தைகளுக்கும் கிருஷ்ணர் வேடம் அணியலாம்.


Click it and Unblock the Notifications
