சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் சக்திவேல் வாங்கும் நிகழ்வு! முருகன் திருமேனியெங்கும் வியர்வை!

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் சூரசம்கார விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது முருகப்பெருமானின் திருமேனி எங்கும் வியர்க்கும் அபூர்வ காட்சியை பக்தர்கள் மெய்சிலிர்த்தபடியே தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரத்திற்கு முதல் நாள் இந்த வேல் வாங்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்கார வேலவர் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கியதாக கந்த புராணம் கூறுகிறது. இந்த நிலையில் சிங்கார வேலவர் கோவிலின் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான அம்பாளிடம் முருகன் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.

sikkal singaravelavar temple

இதையடுத்து முருக பெருமான் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினார். மகாதீபாராதனைக்குப் பிறகு முருக பெருமான் அஜபா நடனத்துடன் ஆலயத்திற்குள் வலம் வந்தார். அப்போது வேல்நெடுங்கண்ணி அம்மன் சன்னதியில் இருந்து சக்தி வேலை பார்வதி தேவி, முருகனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது முருகன் சிலையில் முத்து முத்தாக வியர்க்கும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து அங்கு காத்திருந்த பக்தர்கள் "கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா" என்ற பக்தி கோஷங்களுடன் சாமி தரிசனம் செய்தனர்.

பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடி இருந்ததை யொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்திருந்தனர்.

முருகனுக்கு ஏன் வியர்க்கிறது தெரியுமா?

வேலை வாங்கியதும் முருகனுக்கு ஏன் வியர்க்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். சூரபத்மனை அழிக்க அன்னை பராசக்தி தனது ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி சக்திவேலாக மாற்றி முருகப் பெருமானிடம் வழங்குவார். தாயிடம் இருந்து வேலை வாங்கியதும், அந்த அசுரனை வதம் செய்ய வேண்டும் என ஆவேசம் பொங்கும் போது முருகனின் திருமேனியில் வியர்க்கும் என்பது ஐதீகம்.

இந்த வியர்வையை அர்ச்சகர்கள் பட்டுத் துணியால் துடைத்தெடுப்பர். இது போல் வியர்வை வந்து கொண்டே இருக்குமாம், திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு முருகப்பெருமானுக்கு வியர்ப்பது நின்றுவிடும். அதாவது ஒரு மாவீரன் போருக்கு தயாராகும் போது அவரது உடலில் ஏற்படும் வெப்பாற்றலையும், வெல்ல வேண்டும் என்ற ஆக்ரோஷத்தையும் காட்டுவதாக இந்த வியர்க்கும் நிகழ்வு நடக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+