காலையில் கண் விழிக்கும் போது எதை பார்க்கலாம்? எதை பார்க்கக் கூடாது?
சென்னை: காலையில் எழுந்தவுடன் நாம் யாரை அல்லது எதைப் பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. ஆனால், ஒரு நல்ல விழிப்பு தரிசனம் நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களை நமக்கு தரும் என்கிறார்கள்.
இதுகுறித்து ஆத்ம ஞான மையம் எனும் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: காலையில் கண் விழிக்கும்போது, முதலில் நமது உள்ளங்கைகளை பார்ப்பது நல்லது.

ஏனெனில், உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. உள்ளங்கைகளை பார்த்து மகாலட்சுமியை மனதார நினைத்து அன்றைய நாளை தொடங்கினால், அது ஒரு நல்ல விழிப்பு தரிசனமாக அமையும்.
உள்ளங்கைகளை தவிர, பூரண கும்பம், கோயில், கோயில் மணி, பசுமாடு கன்று குட்டி, இயற்கை காட்சிகள், மற்றும் நல்ல மலர்கள் போன்ற மங்களகரமான விஷயங்களையும் பார்க்கலாம். இதுமட்டுமின்றி, மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி போன்ற மங்களப் பொருட்களையும் காலையில் பார்ப்பது சிறந்தது.
இவை எல்லாவற்றையும் பார்க்க இயலாதவர்கள், வீட்டில் கடலின் படங்கள் இருந்தால் கூட பார்க்கலாம். ஒரு கணவன் மனைவியின் முகத்திலோ, மனைவி கணவனின் முகத்திலோ விழிக்கலாம். குழந்தைகள் பெற்றோரின் முகத்திலோ அல்லது பெற்றோர்கள் குழந்தைகளின் முகத்திலோ விழிப்பது அற்புதமான விழிப்பு தரிசனமாக இருக்கும்.
இப்படி நாம் அன்றாடம் காணும் விஷயங்கள் கூட ஒரு நல்ல நாளாக அமைய உதவும். இவ்வாறு தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் காலை கண் விழிக்கும்போது அபசகுணமான வார்த்தைகளைப் பேசுவதையோ, கேட்பதையோ, சண்டையிடுவதையோ தவிர்க்க வேண்டும். யாரையும் திட்டிக் கொண்டோ அல்லது வாக்குவாதம் செய்துகொண்டோ நாள் துவங்குவதைக் கைவிடவும்.
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் சுவாலைகளை கண் விழித்ததும் பார்க்க வேண்டாம். இவை எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். படுக்கையிலிருந்து அவசரமாகவும், பதற்றத்துடனும் எழுவதைத் தவிர்க்கவும்; இது மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும்.
பழுதான கடிகாரத்தை பார்க்கக் கூடாது. இப்படி பார்த்தால் இது நேரமின்மை மற்றும் துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. அது போல் வீட்டில் உள்ள உடைந்த பொருட்கள், கண்ணாடி போன்றவற்றை காலையில் பார்க்கக் கூடாது.
தூங்கி எழுந்ததும் உங்கள் நிழலை பார்க்கக் கூடாது, இது பயத்தை உண்டாக்கும். காட்டு விலங்குகளின் படங்கள் அல்லது வன்முறையான காட்சிகளைப் பார்ப்பது எதிர்மறை உணர்வுகளைத் தரும் என்கிறார்கள். இதெல்லாம் சாஸ்திரங்கள் நம்புவதும் பின்பற்றுவதும் அவரவர் நம்பிக்கையை பொருத்தது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications