'ஒன்இந்தியா தமிழ்' திருப்பாவை - திருவெம்பாவை பாடல் போட்டி 2026: சுட்டீஸ்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு
மார்கழி மாதம் என்றாலே பக்திப் பாடல்களும், அதிகாலைப் பஜனைகளும் நம் நினைவுக்கு வரும். இறைவனை நோக்கி ஆண்டாள் நாச்சியார் பாடிய திருப்பாவை முப்பது பாடல்களும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது பாடிய திருவெம்பாவை பாடல்களும் இம்மாதத்தின் தனிச்சிறப்பு.
கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் உங்கள் குழந்தைகளின் கலைத்திறனையும் பக்தியையும் ஊக்குவிக்க "ஒன்இந்தியா தமிழ்" பிரம்மாண்டமான பாடல் போட்டியை நடத்துகிறது!

போட்டியில் பங்கேற்பது எப்படி?
உங்கள் வீட்டு குட்டீஸை (15 வயதிற்கு உட்பட்டவர்கள்) அழகாக ஆண்டாள் வேடமிட்டோ அல்லது பாரம்பரிய உடையிலோ அலங்கரித்து, திருப்பாவை அல்லது திருவெம்பாவை பாடல்களைப் பாட வைத்து வீடியோ எடுங்கள்.
நிபந்தனைகள்:
- பாடல்கள் ராகத்தோடும், தெளிவான உச்சரிப்போடும் இருக்க வேண்டும்.
- புத்தகத்தைப் பார்க்காமல் (மனப்பாடமாக) பாடுபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
- வீடியோவின் தரம் தெளிவாக இருக்க வேண்டும்.
- யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற வேறு எங்கும் பதிவேற்றம் செய்யப்படாத புதிய வீடியோவாக இருத்தல் அவசியம்.
காத்திருக்கும் பரிசுகள்!
சிறப்பாகப் பாடும் குழந்தைகளுக்கு அசத்தலான பரிசுகள் காத்திருக்கின்றன:
- முதல் பரிசு: ரூ. 2,000 மதிப்பிலான அமேசான் கிஃப்ட் வவுச்சர்
- இரண்டாம் பரிசு: ரூ. 1,000 மதிப்பிலான அமேசான் கிஃப்ட் வவுச்சர்
- மூன்றாம் பரிசு: ரூ. 500 மதிப்பிலான அமேசான் கிஃப்ட் வவுச்சர்
வீடியோவை அனுப்ப வேண்டிய முகவரி
உங்கள் குழந்தைகளின் திறமையை உலகுக்குக் காட்ட, வீடியோவை கீழே உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு உடனே அனுப்புங்கள்: வாட்ஸ்அப் எண்: +91 9844252142
கடைசி தேதி: இன்று வரை நீங்கள் வீடியோக்களை அனுப்பலாம்!
குறிப்பு: வீடியோவுடன் குழந்தையின் பெயர், வயது, வகுப்பு, பெற்றோர் பெயர் மற்றும் ஊர் பெயரைத் தெளிவாகக் குறிப்பிடவும்.
வாருங்கள் வாசகர்களே! உங்கள் குழந்தைகளின் மழலை மொழியில் பக்தி மணம் கமழட்டும். பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்!












Click it and Unblock the Notifications