வடலூரில் தைப்பூச பெருவிழா ஜோதி தரிசனம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
கடலூர்: கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் சத்ய ஞான சபையில் 155-ஆவது தைப்பூச பெருவிழா ஜோதி தரிசனம் இன்று காலை 6 மணியளவில் நடைபெற்றது. திரையை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் வடலூா் வள்ளலாா் சத்ய ஞான சபையில் பூச நட்சத்திர தினத்தன்று தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு நேற்று தருமசாலையிலும், மருதூர் மற்றும் நற்கருங்குழி வள்ளலாா் சந்நிதியிலும், ஞானசபையிலும் சன்மாா்க்கக் கொடியேற்றப்பட்டது.

பார்வதிபுரம் கிராம மக்கள் மேள தாளங்களுடன் சீர்வரிசை தட்டுகளை ஞான சபைக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வள்ளலார் திருவுருவப் படம், சன்மார்க்க கொடி, அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. பின்னர், கிராம மக்கள் அந்தப் பல்லக்கை ஊர்வலமாக சுமந்தபடி ஞான சபையை வலம் வந்து கொடி மரம் அருகே கொண்டு வந்தனர். பல்லக்கில் இருந்த அனைத்துப் பொருட்களுக்கும் தீபஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், அங்கு சன்மார்க்க கொடி பாடல் பாடியபடி சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டது.
இதில், திரளான பொதுமக்கள், சன்மார்க்கத்தின் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, திருஅருட்பா இசை நிகழ்ச்சியும், சன்மார்க்க கருத்தரங்கமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான, தைப்பூச பெருவிழா ஜோதி தரிசனம் காலை 6 மணி மணிக்கு நடைபெற்றது. திரையை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, 10 மணி, பிற்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாளான திங்கள்கிழமை காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. இதேபோல, வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் வருcd 3 ஆம் தேதி திருஅறை தரிசனம் நடைபெறவுள்ளது.
தைப்பூச பெருவிழாவையொட்டி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தஞ்சை உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஜோதி தரிசனம் மேற்கொண்டனர். பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளலாா் தெய்வ நிலைய நிா்வாகத்தினா் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications