வெள்ளை குதிரையில் எழுந்தருளிய திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி.. வெற்றியுடன் தெய்வானைக்கு மாலை!
மதுரை: உலகப் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் 6ஆம் நாளான இன்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வெள்ளை குதிரையில் எழந்தருளிய வீரபாகு தேவருடன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்தார். பின்னர் பின்னர் சுவாமி கோயிலுக்கு சென்று அங்கு சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் மீண்டும் சுவாமி வீதி உலா வந்து அதன் பிறகு கோயிலை சென்று அடைந்தார்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த பத்தாம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் காலையும் மாலையும் சண்முகருக்கு சண்முகா அர்ச்சனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தினந்தோறும் உற்சவர் சன்னதியிலிருந்து முருகன் தெய்வானை சர்வ அலங்காரத்தில் புறப்பாடு திருவாச்சி மண்டபத்தில் ஆறு முறை வலம் வருவார். இதனை தொடர்ந்து நேற்று சூரனை வதம் செய்ய வேல் வாங்குதல் நிகழ்ச்சியில் சிவபெருமான் கோவனர்த்தினம்பிக்கை அம்மன் முருகப்பெருமான் சூரனை வதம் செய்ய நவரத்ன பதிக்கப்பட்ட வேல் கோவனர்த்தின மிக்கையிடம் இருந்து பெற்று கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை நான்கு மணிக்கு ஒடுக்கு மண்டபத்தில் தங்கமயில் வாகனத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி எழுந்துருளினர் இவருடன் வெள்ளை குதிரை வாகனத்தில் வீரபாகு தேவர் எழுந்துருளின் அங்கு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது.
அதன் பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடு ஆகி முக்கிய ரத வீதியான மேல ரத வீதி கீழரதவீதி வழியாக 16 கால் மண்டபம் வந்து அங்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி வீரபாகுத் தேவர், சூரன் ஆகியோர் எழுந்தருளி அதன் பின்பு சூரசம்ஹாரம் நடைபெற்றது.
அதன் பின்பு முருகப்பெருமானின் பிரதிநிதி சூரசம்ஹார லீலை கூறினார். அதன் பின்பு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி கோயிலுக்கு சென்று அங்கு சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் மீண்டும் சுவாமி வீதி உலா வந்து அதன் பிறகு கோயிலை சென்று அடைந்தார்.
விழாவின் முக்கிய 16ஆம் தேதி நாளை காலையில் சட்ட தேரோட்டம் கிரிவீதி வலம்வரும் அதன் பின்பு பாவாடை தரிசனமும் நடைபெறும். விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தி பரவசத்தில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டனர்.




Click it and Unblock the Notifications
