கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்..சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி! அருட்பாலித்த ஜெயந்திநாதர்
தூத்துக்குடி: உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் 5-ம் நாள் நிகழ்வாக சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்கச் சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலித்தார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ந் தேதி காலை யாகசாலை பூஜையுடன் கோலகலமாகத் தொடங்கியது.

தொடர்ந்து 6 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளி மாநிலங்கள், மற்றும் வெளி நாடுகள் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி கோவில் வளாகங்களில் தங்கி இருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
கந்தசஷ்டி திருவிழாவின் 5-ம் நாளான இன்று யாகசாலை மண்டபத்தில் யாகசாலை நடைபெற்று பூர்ணாகுதி நடைபெற்று மகாதீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் வைத்து
சுவாமி ஜெயந்திநாதர்க்கு பால், பழம் , பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார் தொடர்ந்து கோவில் சண்முக விலாஸ் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பக்தி கோசம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி திருவிழா தொடங்கிய நிலையில் ஏராளமான பக்தர்கள்
நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


Click it and Unblock the Notifications
