Rasi Palan This Week: விருச்சிகம் ராசிக்கு கோபத்தால் வரப்போகும் சிக்கல்.. இது மட்டும் கூடவே கூடாது

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Viruchigam Lucky zodiac signs

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.

அந்த வகையில், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசியினர் இந்த வாரம் சற்று கவனமாக இருக்க வேண்டும். உத்யோகம், தொழில், வியாபாரம், கல்வி என எல்லாவற்றிலும் சின்ன சின்ன தடைகள் ஏற்படும். இருந்தாலும் நீங்கள் சிந்தித்து உறுதியாக எடுக்கும் முடிவுகளில் பெரிய வெற்றி கிடைக்கும். தீர்க்கமான முடிவுகளில் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் இருந்த சங்கடங்கள் விலகும்.

எச்சரிக்கை

தாய், தந்தை வழி உறவு மேன்மையடையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் மனதிற்கு பிடித்த கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். அரசுத்துறை அலுவலர்கள், அரசியல் புள்ளிகள், உத்யோகத்தில் உயர் பொறுப்பில் இருப்போர் பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உத்யோகத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கோபம்

எந்த முக்கிய விஷயமாக இருந்தாலும் குடும்பத்தினருடன் நன்கு ஆலோசித்து தான் முடிவு செய்ய வேண்டும். ஆவணங்களில் கையெழுத்திடும்போதும், ஆன்லைன் நிதி அல்லது பரிவர்த்தனையில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வண்டி, வாகனங்கள் ஓட்டும்போது காவல்துறையிடம் சிக்க வாய்ப்புள்ளது. அதிலும் கவனம் வேண்டும். வார்த்தைகளில் மிக மிக கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்

நரம்பு, கண், தலை வழி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சிறு பிரச்சனை என்றாலும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனை செல்வது அவசியம். சட்டத்திற்கு புறம்பானவர்களிடம் விலகி இருக்க வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படும். உங்கள் வீட்டு அருகில் உள்ள பெருமாள் கோயிலில் வழிபடலாம். திங்கள் கிழமை தோறும் பசு மாடுக்கு உணவு தானம் செய்வது நற்பலன்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+