Milagu Viratham: கந்த சஷ்டிக்கு கடுமையான மிளகு விரதம்! மிளகை சாப்பிட்டால் எப்படி குழந்தை பிறக்கும்?

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: கந்த சஷ்டி விழாவையொட்டி கடுமையான மிளகு விரதம் இருந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த மிளகு விரதம் எப்படி இருக்க வேண்டும், மிளகு விரதத்திற்கும் குழந்தை பேற்றிற்கும் என்ன தொடர்பு என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கந்த சஷ்டி விரதம் மிகவும் கடுமையான விரதம் என்றால் அது மிளகு விரதம் ஆகும். இது 6 நாட்கள் இருக்கப்படும் விரதமாகும். முதல் நாள் ஒரு மிளகை சாப்பிட வேண்டும், 2ஆவது நாள் 2 மிளகு, 3ஆவது நாள் 3 மிளகு, 4 ஆவது நாள் 4 மிளகு, 5ஆவது நாள் 5 மிளகு, 6ஆவது நாள் 6 மிளகு என விரதமிருக்க வேண்டும்.

Milagu Viratham

பிரதமை அன்று தொடங்கும் இந்த விரதத்தில் மிளகை ஒவ்வொரு நாளும் ஒரு மிளகு கூட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன் தண்ணீரை தவிர வேறு எதையும் சாப்பிடக் கூடாது. 6 நாட்கள் விரதம் இருந்துவிட்டு 7ஆவது நாள் காலையில் முருகப்பெருமானை வழிபட்டு மற்ற பக்தர்களுடன் சேர்ந்து விரதத்தை நிறைவு பெற வேண்டும்.

இந்த கடுமையான விரதத்தை குழந்தை பேறுக்காக வேண்டிக் கொள்வோர் இருப்பதுண்டு. அதாவது சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள். அதன் அர்த்தம் சஷ்டியில் விரதம் இருந்தால் அகத்தில் இருக்கும் கருப்பையில் குழந்தை வரும் என்பதாகும்.

இந்த 6 நாட்களும் மிளகு, தண்ணீரை தவிர வேறு எதையும் சாப்பிடக் கூடாது. மிளகு விரதம் இருப்பது ஏன் என்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது மிளகு விரதம் கருப்பையில் உள்ள தீயசக்திகளை அழித்து புதிய ஆற்றலைத் தரும் என்பதை ஐதீகம்.

மிளகு ரத்தத்தை தூய்மைப்படுத்தும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகளை சரி செய்யும். செரிமானத்தை சீராக்கி உடலில் இருந்து நச்சுக்களை நீக்கும். 10 மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம் என்பார்கள்.

அதே போல் 10 மிளகை ஒரு மஞ்சள் நிற துணியில் கட்டி நம்முடன் வைத்திருந்தால் எந்த தீயசக்தியும் நெருங்காது. மிளகை சாப்பிடும் போது முருகனே நெருப்பு வடிவமாக வயிற்றுக்குள் சென்று கருப்பையில் இருக்கும் பிரச்சினைகளை நீக்கி குழந்தை பிறப்புக்கு அருள்புரிவார்.

விரதத்தால் நாம் சாப்பிடாமல் இருப்பதால் செரிமான உறுப்புகள் ஓய்வில் இருந்து, உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால்தான் மிளகு விரதம் மிகவும் சக்திவாய்ந்தது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+