Naga Panchami 2026: நாக பஞ்சமி எப்போது? நாகர்களுக்கு பூஜை செய்ய நல்ல நேரம் எது?
சென்னை: இந்த ஆண்டு நாகபஞ்சமி எப்போது கொண்டாடப்படுகிறது, எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும். நாகபஞ்சமியில் நாகங்களை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
ஆடி மாதத்தில் முக்கிய பண்டிகைளில் ஒன்று நாகபஞ்சமி. ஆடி மாதத்தில் சுக்ல பட்சம் பஞ்சமி திதியில் நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாக தேவதையை வழிபடுவது வழக்கம்.

நாக பஞ்சமியில் நாட்டின் முக்கிய நாகர் கோயில்களில் பூஜை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நாக பஞ்சமி எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
இந்த முறை ஆகஸ்ட் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.52 மணிக்குத் தொடங்கி மறுநாள் ஆகஸ்ட் 17ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணி வரை உள்ளது. பஞ்சமி திதியின் சூரியோதயம் ஆகஸ்ட் 17ஆம் தேதி வருவதால் அன்றே கொண்டாடலாம்.
இந்த நாளில் எப்போது பூஜை செய்யலாம் என்றால், காலை 5.51 மணி முதல் 8.29 மணி வரை செய்யலாம். அந்த நேரத்தில் முடியாவிட்டால் காலை 9.19 மணி முதல் 10.55 மணி வரையும், மதியம் 12.05 மணி முதல் 12.56 வரையும், மதியம் 2.06 மணி முதல் 3.42 மணி வரையும் மாலை 5.18 மணி முதல் 6.54 மணி வரையும் நல்ல நேரங்களாகும். இந்த நேரத்தில் பூஜை செய்யலாம்.
விவசாயத்தை அழிக்கும் எலிகளை கொன்று வேளாண்மை செழிக்க பாம்புகள் உதவுவதால் அவற்றை கொண்டாடுவதுதான் நாக பஞ்சமி ஆகும். இந்த நாளில் காலை குளித்துவிட்டு நாகர் சிலை அல்லது பாம்பு உருவ சிலைக்கு பால், தண்ணீர், மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் நாகதேவருக்கு பிடித்த மலர்களால் அலங்காரம் செய்து இனிப்புகளை வைத்து வழிபட வேண்டும்.


Click it and Unblock the Notifications
