வீட்டு வாசலில் 7 பச்சை மிளகாயும், ஒரு எலுமிச்சை பழத்தையும் கட்டி தொங்க விடுவது ஏன் தெரியுமா?
சென்னை: வீடுகள், கடைகளில் வாசலில் எலுமிச்சை பழமும் பச்சை மிளகாயையயும் சேர்த்து கட்டி வைத்திருப்பார்களே, அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அதை ஏன் கட்டுகிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில், தமிழகம் உட்படப் பல மாநிலங்களில், நூற்றாண்டுகளாகவே வீட்டு வாசலிலோ அல்லது கடை வாசலிலோ எலுமிச்சை மற்றும் ஏழு மிளகாய்களைக் கோர்த்துத் தொங்கவிடும் பழக்கம் உள்ளது.

சிலர் இதை ஒரு பாதுகாப்புக் கவசமாக நம்பினாலும், வேறு சிலரோ வெறும் மூடநம்பிக்கை என்கிறார்கள். எனினும், இந்த 'நிம்பு மிர்ச்சி' வழக்கத்திற்குப் பின்னால் ஆன்மீக நம்பிக்கைகளும், ஒரு சில பண்டைய அறிவியல் தர்க்கங்களும் அடங்கியுள்ளன.
நன்கு நடந்து கொண்டிருந்த வியாபாரம், ஒருவரின் பொறாமைப் பார்வையால் சரிந்துவிட்டது என்பதை 'கண் திருஷ்டி' என்கிறோம். இந்தத் தீய பார்வையிலிருந்து பாதுகாக்கவே வாசலில் எலுமிச்சை- மிளகாய் கொத்து கட்டப்படுகிறது.
எலுமிச்சை எதிர்மறை ஆற்றல்களைத் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டு, மிளகாய் தீய எண்ணங்களையும் பொறாமையையும் எரிப்பதாக நம்பப்படுகிறது. இந்தக் கொத்து காய்ந்து கருப்பாக மாறும்போது, அது வீட்டை நோக்கி வந்த அத்தனை கஷ்டங்களையும், கண் திருஷ்டியையும் ஈர்த்துக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
வீட்டின் பிரதான வாசலில் இந்தக் கொத்தைக் கட்டுவதால், அந்த இடத்தின் சூழல் தூய்மையடைந்து, வாஸ்து தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது.
இது எதிர்மறை ஆற்றல் வீட்டுக்குள் வராமல் தடுத்து, தீய சக்திகளை வெளியேவே நிறுத்திவிடுகிறது. இதனால், வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்கும் என்பது ஒரு நம்பிக்கை.
பழங்காலத்தில் பூச்சி விரட்டும் ஸ்ப்ரேக்கள் இல்லாததால், மண் வீடுகளில் பூச்சிகளின் தொல்லை அதிகம். எலுமிச்சையின் வாசமும், மிளகாயின் கார நெடியும் பூச்சிகளை அண்டவிடாது. எனவே, இது ஒரு இயற்கையான பூச்சிவிரட்டியாகச் (Natural Repellent) செயல்பட்டது என்பது இந்த வழக்கத்தின் விஞ்ஞானப் பின்னணியாகும்.
பாரம்பரிய வழக்கப்படி, இந்த எலுமிச்சை-மிளகாய் கொத்தை வாரத்திற்கு ஒருமுறை, குறிப்பாக சனிக்கிழமைகளில் மாற்ற வேண்டும். எதிர்மறை ஆற்றல்கள் இந்தக் கொத்தில் சிக்கிக் கொள்வதாக நம்பப்படுவதால், ஒவ்வொரு வாரமும் இதைப் புதிதாக மாற்றுவது அவசியம்.
வீட்டு வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுவது ஒரு பாரம்பரிய நம்பிக்கையாகும். இது தீய சக்திகள், கண் திருஷ்டி மற்றும் பொறாமை போன்ற எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.
குறிப்பாக, செல்வத்தின் தெய்வமான லட்சுமியின் மூத்த சகோதரி 'அலட்சுமி' (மூதேவி), புளிப்பு மற்றும் காரமான பொருட்களை விரும்புவார் என்பதால், அவர் வாசலிலேயே அவற்றைப் உண்டு திருப்தியடைந்து வீட்டிற்குள் வராமல் திரும்பிச் சென்றுவிடுவார் என்பது ஐதீகம். அறிவியல் ரீதியாகப் பார்த்தால், எலுமிச்சை மற்றும் மிளகாயில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் காரத்தன்மை பூச்சிகள் மற்றும் கிருமிகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும் இயற்கை கிருமிநாசினியாகச் செயல்படுகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications