இன்று புரட்டாசி 1: அசைவ உணவுகளை ஏன் உட்கொள்ளக் கூடாது? மகாளய அமாவாசை எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்டாசி மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் 30 நாட்களுக்கு அசைவம் ஏன் சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த புரட்டாசி 1 முதல் மகாளய அமாவாசை வரை என்னென்ன செய்யக் கூடாது என்பதையும் பார்க்கலாம்.

தமிழ் மாதங்களில் ஆடி, புரட்டாசி, மார்கழி உள்ளிட்ட மாதங்கள் கடவுளுக்கு உகந்த மாதங்களாகும். அதிலும் புரட்டாசி மாதம் என்பது முற்றிலும் பெருமாளுக்கு உகந்தது.

spirituality purattasi

இந்த மாதத்தில் எங்கு திரும்பினாலும் கோவிந்தா கோஷம் ஒலிக்கும். அந்த வகையில் இன்று புரட்டாசி மதம் பிறந்துள்ளது. இதையொட்டி காலையிலேயே பக்தர்கள் பெருமாள் கோயில்களில் கூடிவிட்டனர்.

அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபடுவது நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வீடுகளிலும் மக்கள் பெருமாளுக்கு படையலிடுவார்கள்.

இந்த மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்துவிட்டு மக்கள் விரதம் இருப்பது வழக்கம். வீட்டில் துளசி செடி முன்பு விளக்கேற்றி வழிபட்டு விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்வதும் உண்டு.

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக் கூடாது என்பதற்கு ஒரு அறிவியல் காரணமும் இருக்கிறது. புரட்டாசி மாதம் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது.

இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக் கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும்.

அது போல் மகாளய அமாவாசை வரை என்னென்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். இந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி அமாவாசை வருகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை பித்ருக்களை நினைத்து தர்ப்பணம், திதி கொடுத்து வழிபடும் மரபு ஆகும். இந்த அமாவாசை காலம் வரை பெருமாள் கோயில்களுக்கு செல்வது, ஸ்லோகங்கலை சொல்வது, பக்தி பாடல்களை பாடுவது என இருத்தல் நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+