சபரிமலை மண்டல பூஜையில் வரலாற்று சிறப்பு! நேற்று ஒரே நாளில் ஐயப்பனை 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
பத்தினம்திட்டா: சபரிமலையில் ஐயப்பனை நேற்று ஒரே நாளில் 1.06 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ள சம்பவம் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இதுவரை ஒரே நாளில் இத்தனை பேர் தரிசனம் செய்ததே இல்லையாம்.
கார்த்திகை மாதம் மாலை அணிந்த பக்தர்கள் மண்டல பூஜைக்கும் மகர விளக்கு பூஜைக்கும் சபரிமலைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சபரிமலையில் நவம்பர் 16-ஆம் தேதி மண்டல பூஜை யாத்திரை தொடங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

41 நாட்கள் அதாவது டிசம்பர் 26ஆம் தேதி வரை மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜைக்கான நாள் இன்னும் 2 நாட்களில் நெருங்கி வரும் நிலையில் நாள்தோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மண்டல பூஜை முன்னிட்டு நேற்று (டிசம்பர் 23) 1,06,621 பேர் சாமி தரிசனம் செய்தனர். நேற்று ஒரே நாளில் 22,769 பேர் ஸ்பாட் புக்கிங் மூலமும் 5,175 பேர் புல்மேடு வழியாகவும் வந்து தரிசனம் செய்துள்ளனர்.
தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் முன்பதிவுக்கான எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரித்துள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி முதல் கடந்த 38 நாட்களில் 30.78 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே பூஜை காலத்தில் 26.41 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருந்தனர். எருமேலியிலிருந்து அழுதா நதி வழியாக பம்பை வரும் பெருவழிப்பாதை என்பது காலம் காலமாக பக்தர்கள் பயன்படுத்தி வந்த பாதையாகும்.
இது அடர்ந்த காடாகும். இங்கு ஒற்றையடி பாதையாகும். எருமேலி வனச்சாலை செல்ல அழுதா நதியில் இருந்து 30 கி.மீ. தூரம் ஆகும். இங்கு பயணிக்கும் பக்தர்கள் நடுகாட்டுக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக குறிப்பிட்ட இடங்களில் இருந்து பக்தர்கள் செல்வதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்குழியில் இருந்து பக்தர்களை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும் அழுதாவிலிருந்து காலை 7 மணி முதல் மாலை 3.30 மணி வரையும், புல்மேடு பாதையில் சத்திரத்திலிருந்து காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகா சங்கராந்தி நாளன்று மகர ஜோதியை காண ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். தற்போது கடந்த சில தினங்களாக சுவாமி தரிசனம் செய்ய அதிகபட்சமாக 18 மணி நேரம் ஆகிறது. https://sabarimala.kerala.gov.in/ என்ற ஐடியில் பக்தர்கள் ஆன்லைனில் புக்கிங் செய்யலாம். இதில் போன் எண்ணை கொடுத்து அவர்களுக்கு வரும் ஓடிபி எண்ணை வைத்து தனிக் கணக்கு தொடங்கிவிட வேண்டும்.
பிறகு பெயர், முகவரி, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்களை பதிவிட வேண்டும். பிறகு தரிசன நாள், செல்லும் பாதை, சபரிமலை கோயிலை அடைந்து தரிசனம் செய்வதற்கான நேரம் உள்ளிட்டவை தேர்வு செய்து உறுதி செய்தால் விர்சுவல் க்யூ டிக்கெட் முன் பதிவு ஆகிவிடும். பிறகு இந்த டிக்கெட்டை தரிசன கவுன்ட்டரில் கொடுத்தால் அவர்கள் ஸ்கேன் செய்து சரி பார்த்து பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications