இறந்தவர்கள் வீட்டுக்கு வரணுமா? தப்பு தப்பா நடக்குதா? முன்னோர்கள் கோபமாக உள்ளதை உணர்த்தும் 5 அறிகுறி
சென்னை: குடும்பத்தில் எந்தவொரு சுபகாரியம் செய்தாலும், அதில் நம்முடைய முன்னோர்களின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும் என்று விரும்புவோம்.. நம்முடைய முன்னோர்கள் கோபமாக இருந்தால் வாழ்க்கையில் தீராத இன்னல்கள் வரும் என்று பலரும் மனம் வேதனைப்பட நேரிடும்.. அந்தவகையில், இறந்த முன்னோர்கள், நம்மீது கோபமாக இருக்கிறார்கள் என்பதை எப்படி உணருவது? இதற்காக வீட்டில் தென்படும் அறிகுறிகள் என்னென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
இறந்தவர்களை அடிக்கடி கனவில் காணக்கூடாது என்பார்கள்.. அப்படி அடிக்கடி கனவில் வருவது கெட்ட சகுனம். அதிலும் அவர்கள் அழுவது போன்ற கனவுகள் திரும்ப திரும்ப வந்தால், அவர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அல்லது மன வருத்தத்தில் இருக்கிறார்கள் அல்லது மனக்குறையுடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம்..

பித்ருதோஷம் நீங்க பூஜை
மொத்தத்தில் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதைத்தான் இதுபோன்ற அழுது காட்டுகிறார்களாம். இப்படி கனவு வந்தால் முன்னோர்களிடம் அவர்களை வழிபட மறந்ததற்காகவும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவத்திற்காகவும் மன்னிப்பு கேட்க வேண்டும். பித்ருதோஷம் நீங்க பூஜைகள் செய்ய வேண்டும்..
அதேபோல, உங்களுடைய சாப்பாட்டில் அடிக்கடி தலைமுடி காணப்படுகிறது என்றால் இதுவும் முன்னோர்களின் கோபத்தை உணர்த்துவதாக அர்த்தம்.. நிறைவேறாத ஆசைகளுடன், சந்தோஷமின்றியும், பசியுடனும் இருப்தபால், உணவில் தலைமுடி இருப்பது போல உணர்த்தப்படுகிறாம்.
கோபத்தின் அடையாளங்கள்
அதேபோல, வீட்டில் எந்த சுப காயரிங்களை செய்ய முற்பட்டாலும், அதில் ஏதாவது தடங்கல்கள், இடையூறுகள் ஏற்பட்டு கொண்டேயிருக்கும்.. இதுவும் இறந்தவர்களின் கோபத்தின் அடையாளமாகும்.. திருமணம் நடக்காமல் இருப்பது, திருமணமாகி பல வருடம் ஆகியும் குழந்தைகள் பிறக்காமல் இருப்பதும் முன்னோர்களின் மனவருத்தத்தை பிரதிபலிக்கக்கூடியவைதான்.
நீங்கள் பெற்ற பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்கவில்லையானால், நீங்கள் உங்கள் முன்னோர்களை மகிழ்விக்க வேண்டும் என்று அர்த்தம்.. திடீர் திடீர் நஷ்டங்கள், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும் பித்ருதோஷத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
இனம்புரியாத பயம், கலக்கம்
அதேபோல, வீட்டில் எந்நேரமும் எதற்கெடுத்தாலும் பயப்படுவது, கவலைப்படுவது, வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அச்சமும், பீதியும் சூழ்ந்து கிடப்பது, இவையெல்லாம் முன்னோர்களின் கோபத்துக்கான அறிகுறி என்கிறார்கள்..
அதேபோல, வீட்டை பலமுறை சுத்தம் செய்தாலும், ஏதாவது துர்நாற்றம் அல்லது வித்தியாசமான நாற்றம் வீசிக் கொண்டேயிருந்தால், இதுவும் முன்னோர்களின் கோபத்தையும், மன வருத்தத்தையும் உணர்த்துவதாக அர்த்தம்.
முன்னோர்களின் மனதை குளிர்விக்க என்ன செய்யலாம்
சிரித்து கொண்டிருக்கும் முன்னோர்களின் படத்தை, வீட்டின் தென்மேற்கு சுவரில் அல்லது மூலையில் வைக்கலாம்.. காலையில் தூங்கி எழுந்ததுமே, முன்னோர்களை வணங்க வேண்டும்.. அவர்களது போட்டோக்களுக்கு மலர் மாலைகளை அணிவிக்கலாம்.. முன்னோர்களின் பிறந்த நாள் அல்லது ஆண்டுவிழா போன்றவற்றை கொண்டாடலாம்.. அத்துடன் ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இவைகளை தவறாமல் செய்து வந்தால் முன்னோரகளின் கோபம் மெல்ல தணியும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications