Aadi Amavasai: ஆடி அமாவாசை! தர்ப்பணம் செய்ய நல்ல நேரம் எது? என்னென்ன படையலிடலாம்?
சென்னை: ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் எது என்பதை பார்க்கலாம். இன்று ஆடி அமாவாசையையொட்டி நீர் நிலைகளில் மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். அமாவாசைகளில் முக்கியமானது ஆடி அமாவாசை.
மாதந்தோறும் அமாவாசைகள் வந்தாலும் தை, ஆடி, புரட்டாசி (மகாளய) மாதங்களில் வரும் அமாவாசைகள்தான் மிகவும் முக்கியமானது. உத்தராயண காலம் முடிந்து தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசையான ஆடி அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு.

பித்ருலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் அமாவாசை அன்று நேராக பூமிக்கு வருவார்கள் என்பது ஐதீகம். அவர்கள் பூமிக்கு வரும் போது நாம் அவர்களின் பெயரையும் திதியையும் சொல்லி கொடுக்கும் தர்ப்பணமானது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து நம்மை மனதார வாழ்த்த வழிவகுக்கும்.
முன்னோர்களின் ஆசியானது பல தலைமுறைகளுக்கும் சேரும் என்பதால் அமாவாசையின் போது பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் இன்றைய தினம் ஆடி அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பிண்டத்தையும் எள்ளையும் தண்ணீரையும் கரைத்து நீர் நிலைகளில் விடுகிறார்கள்.
அமாவாசை திதி இன்று காலை 3.06 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 1.48 மணி வரை நீடிக்கிறது. ஜூலை 24 ஆம் தேதி வியாழக்கிழமை சூரிய உதயத்திற்கு பிறகு காலை 7.30 மணி முதல் 12 மணி வரை தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் ஆகும்.
ராகு காலம், எமகண்டம் நேரங்களில் தர்ப்பணம் கொடுக்க கூடாது. அது போல் இன்றைய தினம் சாம்பார், பொறியல், வடை, பாயாசம், அப்பளம் என அவரவர் குடும்ப வழக்கப்படி படையலிடலாம். பகல் 12 மணி முதல் 1.20 மணிக்குள் படையலிட வேண்டும்.
சூரிய உதயத்தின் போதுதான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு வியாழக்கிழமை வரும் அமாவாசையில் காலை சூரிய உதயமானது 6 மணிக்கு மேல்தான் வருகிறது. மேலும் 7.30 மணி வரை நல்ல நேரம் இல்லை என்பதால் 7.30 மணிக்கு மேல் தர்ப்பணம் கொடுக்கலாம்.
நீர் நிலைகளுக்கு செல்ல முடியவில்லை என்றால் வீட்டிலேயே மந்திரங்களை படித்து எள்ளும் தண்ணீரையும் இரைத்து காக்கைக்கு உணவளித்து தர்ப்பணம் கொடுக்கலாம். நீர் நிலைகளிலும் வீடுகளிலும் கொடுக்கும் திதியானது காசி, கயாவில் கொடுத்தால் கிடைக்கும் புண்ணியத்தை போன்றே கிடைக்கும். இன்றைய தினம் கண்டிப்பாக தர்ப்பணம் செய்து வைக்கும் அய்யருக்கு வாழைக்காய், அரிசியை தானமாக கொடுங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications