ஆடி முதல் வெள்ளியில்! இந்த இரு பொருளை வைத்து வணங்கி! ஒரே ஒரு மந்திரத்தை சொன்னால் போதும்!
சென்னை: ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று, வீட்டில் எந்த மாதிரியான பூஜை செய்ய வேண்டும், அப்போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன என்பதைப் பார்க்கலாம். ஆடி மாதம் நேற்று பிறந்த நிலையில், அடுத்த நாளே முதல் வெள்ளி வந்திருப்பது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தெய்வ வழிபாடு நடத்த முடியாவிட்டாலும், ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு கட்டாயம் செய்யப்பட வேண்டும். ஆடி மாதங்களில் வெள்ளிக்கிழமை அன்று அம்மனை வழிபட்டால் அனைத்து வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது ஐதீகம்.

பூஜைக்கான ஆயத்தங்கள்
ஆடி வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையிலேயே குளித்துவிட்டு வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் தண்ணீரில் துடைத்து, பூஜை அறையைச் சுத்தம் செய்து, சுவாமிப் படங்களையும் துடைத்து, பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். வேப்பிலையை நிலைவாசலில் கட்டலாம்.
கலசம் வைத்து வழிபாடு செய்யும் பழக்கம் உள்ளவர்கள், பித்தளைச் செம்பில் மஞ்சள் தோய்த்த நூலைக் கட்டி, அதில் நீர் நிரப்பி, மனையில் கோலமிட்டு கலசத்தை வைக்க வேண்டும். அதற்குக் குங்குமம், மஞ்சள் இட்டுப் பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
வழிபாட்டு முறைகள்
பின்னர் குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வணங்க வேண்டும். ஆடி வெள்ளியில் மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நல்லது. அதுபோல, குத்துவிளக்கு பூஜையும் செய்யலாம். சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழம், தேங்காய் போன்ற மங்கலப் பொருட்களைக் கொடுத்து ஆசி பெறலாம்.
பலன்கள் மற்றும் மந்திரம்
ஆடி மாதம் முழுவதும் வழிபாடு நடத்தினால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய தோஷம் போன்ற தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. நினைத்த காரியங்கள் கை கூடும்.
இந்த நாளில் அம்பாள் முன்பு விரலி மஞ்சள், வேப்பிலைக் கொத்து ஆகியவற்றை வைத்து "ஸ்ரீசித்ராய நமஹ" என்று உச்சரித்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பலரின் நம்பிக்கையாகும்.












Click it and Unblock the Notifications