Aadi Perukku: ஆடி18இல் வழிபாடு செய்யும் முறை, என்ன பொருட்கள் வாங்கலாம், தாலி சரடு மாற்ற உகந்த நேரம்
Aadi Perukku: ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பு பெற்ற நாளான ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படும் ஆடி 18 ஆம் நாளில் வழிபாடு செய்யும் முறை, என்னென்ன பொருட்களை வாங்கலாம், பெண்கள் தாலி சரடு மாற்றுவதற்கு உகந்த நேரம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆடிப்பெருக்கு
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். ஆடியில் வரும் 18 ஆம் நாள் மிகவும் விசேஷமான நாளாகும். ஆடி 18 என்ற எண்ணிக்கை மிகுந்த விஷேசமான எண்ணாகும். பதிணென் மேல் கணக்கு, பதிணென் கீழ்கணக்கு என்பது 18 என்ற எண்ணை குறிக்கும், பாரதத்தின் யுத்தம் நடந்த நாட்கள் 18, பாரதத்தின் அத்தியாயங்கள் 18, கீதையின் அத்தியாயங்களும் 18 ஆகும். 18 என்பது சிறப்பு வாய்ந்தது என்பதை 18 சித்த புருஷர்கள் நமக்கு கூறியிருக்கிறார்கள். சபரிமலையில் ஐயப்பன் எழுந்தருளி அருள்புரிவதை 18 படிகளை கடந்து சென்றே அவரை வழிபடுகிறோம். இவ்வாறு 18 எனும் எண்ணிக்கைக்கு சிறப்புகள் அதிகமாக உள்ளன.

ஆடி 18 கொண்டாடப்படுவது ஏன்?
ஆடி மாதத்தில் தான் காவிரி மாதா எல்லோரையும் வந்து சேரும் நாளாகும். இந்த நாளை பெரியோர்கள் கணக்கிட்டு ஆடி 18 அன்று காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகும். காவிரி என்பது ஒரு ஆறை மட்டும் குறிப்பதில்லை. எந்த இடத்தில் எந்தெந்த நதிகளால் மக்கள் வாழ்கிறார்களோ அவர்கள் அனைவரும் அந்தந்த நதிகளை வழிபடக்கூடிய நாளாக இந்த ஆடி 18 உள்ளது. பஞ்சபூதங்களின் துணையில்லாமல் இந்த உலகில் நம்மால் வாழ முடியாது.

தண்ணீர் தெய்வம்
பஞ்சபூதங்களில் ஆதாரமாக இருக்கக்கூடிய 5 இல் ஒன்றாக விளங்குவது தண்ணீர். அந்த தண்ணீரை நாம் தெய்வமாகப் பார்த்து கொண்டாட வேண்டும். அதனை உணர்த்தும் வகையில் வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றில் ஆடி 18 நெருங்க நெருங்க தண்ணீர் வரும் நேரத்தில் உடனடியாக பூக்கள், சூடம் ஏற்றி அம்மா காவிரி மாதா இந்த ஆண்டு எங்களுக்கு நல்ல விவசாய பலனைக் கொடுக்க வேண்டும். எங்களது பிள்ளை குட்டிகள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வழிபடும் முறை இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்குச் சென்றாலும் வேறு பகுதிகளுக்குச் சென்றாலும் தண்ணீர் என்பதே அனைவருக்கும் ஆதாரமாக உள்ளது. அதனால், இந்த ஆடி 18 அன்று அந்த நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அம்பாளை வழிபடுகிறோம்.

வழிபாடு செய்ய உகந்த நேரம்
ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கன்று ஞாயிற்றுக்கிழமையில் அமர்ந்திருக்கிறது. காலை 6 மணி முதல் 9 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம். அல்லது 11 மணியில் இருந்து 12 மணி வரை இந்த வழிபாடு செய்யலாம். தாலிக் கயிறு மாற்ற காலை 11 மணி முதல் 12 மணி வரை உகந்த நேரமாக இருக்கும். காலை 6 மணி முதல் 9 மணி வரை வழிபாடு பயன்படுத்திக் கொள்ளலாம். 9.45 வரை நவமியும், அதற்குப் பிறகு தசமி ஆரம்பிக்கிறது. அதனால், 11 முதல் 12 மணி வரை மிகுந்த நல்ல நேரமாக இருக்கும்.
என்ன விஷயங்களை செய்யலாம்
ஆடி 18 வழிபாடு காலையில் பொதுவாக வழிபடும் வழிபாடாகும். இந்த நாளில் நாம் என்ன விஷயங்களைச் செய்தாலும் அவை எல்லாமே பெருக்கமாகும் என்பது நம்பிக்கை. இன்று நாம் எந்த விஷயங்களை தொடங்கினாலும், தொடங்கிய செயல்கள் அனைத்தும் வெற்றியில் கொண்டு செல்லும். வெற்றியைப் படியை அடைய விரும்புபவர்கள் இந்த வழிபாடுகளை மேற்கொண்டால் நிச்சயமாக எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரம், தொழில் ஆரம்பிப்பது, புதிய செயல்களைச் செய்வது, புதிய பொருள்களை வாங்குவது போன்றவற்றை செய்யலாம். கண்டிப்பாக தங்கம் வாங்க வேண்டும் என்று எதுவும் இல்லை. உப்பு, மஞ்சள் வாங்குவதே போதுமானதாகும். தொழிலை செய்ய திட்டமிடுவது, மேல் படிப்புக்கு திட்டமிடுவது என அனைத்து புதிய விஷயங்களையும் தொடங்கலாம். கடல் மடை திறந்த வெள்ளம் போல உங்கள் செயல்கள் அனைத்தும் தடையின்றி நடக்க இந்த ஆடி 18 ஐ துவக்கமாக வைத்துக் கொள்வது சிறந்ததாகும்.
ஆடி18 கொண்டாடும் முறை
கிணறு, மோட்டார், தண்ணீர் குழாய் போன்றவற்றுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பூ வைத்து வழிபடலாம். வீட்டின் அருகே காவிரி, கங்கை என எந்த ஆறும் இல்லையெனில் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனையே கங்கை, காவிரியாக பாவித்து மலரும், மஞ்சள் தூளும் இட்டு பூஜையறையில் வைத்து, வாழை, கொய்யா, நாவல் பழம், பச்சரிசி மாவு, காப்பரிசு வைத்து வழிபடுவது நல்லது. பாயாசம், பச்சரிசியில் வெல்லம் கலந்து வைக்கலாம், வடை பாயசம் செய்து வைத்து வழிபாடு செய்யலாம்.
தாலி கயிறு அனைவருமே மாற்றலாமா?
தாலி கயிறு கட்டாயமாக மாற்ற வேண்டுமா என்றால் இல்லை. யார் யாருக்கு தேவை இருக்கிறதோ அவர்கள் தாலி சரடை மாற்றிக் கொள்ளலாம். கழுத்தில் மஞ்சள் கயிறைக் கட்டி கொண்டு, நாம் போட்டிருக்கும் தாலியை எடுத்து கழுவி, சுத்தம் செய்து துடைத்துவிட்டு சுவாமி பாதத்தில் வைக்க வேண்டும். உள்ளம் உருகி அம்பாளையும், குலதெய்வத்தையும் வழிபாடு செய்ய வேண்டும்.

பின்னர், கணவர் அல்லது பெரியவர்கள் கையால் தாயால் மாட்டிக் கொண்டு மஞ்சள் குங்குமம் வாங்கிக் கொள்வது நன்மை பயக்கும். எங்கள் வாழ்க்கையில் என்றென்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சி பெருக்க வேண்டும் என்று எண்ணி வழிபாடு செய்யலாம்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications