ஆடி மாத பிறப்பு.. ஆடிப்பூரம்.. கருட ஜெயந்தி.. ஜூலை மாதம் விரத நாட்கள்.. என்னென்ன விஷேசங்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆங்கில மாதத்தில் ஜூலை மாதம் 7வது மாதம். தமிழ் மாதங்களில் ஆனி மாதம் 15 நாட்களும் ஆடி மாதம் 15 நாட்களும் இணைந்த மாதமாகும். ஜூலை மாதத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்க வேண்டுகிறோம். ஜூலை மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் வருகின்றன. சிறப்பு நாட்கள், விஷேச நாட்கள் என்னென்ன விரத நாட்கள் ஜூலை மாதத்தில் வருகிறது என்று பார்க்கலாம்.

Aadi pirappu..Aadi Pooram July matham special festival in Tamil Nadu

இன்னும் சில நாட்களில் ஜூலை மாதம் பிறக்கப்போகிறது. ஜூலை மாதத்தில் ஆடி மாதம் வருவதால் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். திருமணம், வீடு கிரகப்பிரவேஷம் நடைபெறாத நிலையில் கோவில்களில் தினம் தினம் திருவிழா கோலம்தான். பல்வேறு சிறப்பு கொண்ட ஜூலை

ஜூலை 1 சனிப்பிரதோஷம் வருகிறது. அன்றைய தினம் சிவ ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு அபிஷேகங்களில் பங்கேற்கலாம்.

ஜூலை 15ஆம் தேதி சனி மகா பிரதோஷம் பிரதோஷம் மாத சிவராத்திரி

ஜூலை 30ஆம் தேதி மிருத்யுஞ்ச பிரதோஷம் சிவ புராணம் படிப்பது நல்லது. வில்வ இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்ய வேலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும்

ஜூலை 6ஆம் தேதி வியாழக்கிழமை சங்கடகர சதுர்த்தி அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் மாலை சாற்றி வழிபட நன்மை ஏற்படும்.

ஜூலை 13ஆம் தேதியும், 29ஆம் தேதியும் சர்வ ஏகாதசி தினம். இந்த நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும். விரதம் இருந்து பெருமாளை வணங்கினால் உடலும் உள்ளமும் சுத்தமாகும். சுண்டைக்காய், நெல்லிக்காய் சேர்த்து சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஜூலை 17ஆம் தேதி ஆடி மாத பிறப்பு தட்சிணாயன புண்ணிய காலம் பிறக்கிறது. கவலைகள் கஷ்டங்கள் நீங்க முன்னோர்களை வழிபடலாம். அன்றைய தினம் சர்வ அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர நன்மையை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பிறக்கும்

ஜூலை 22ஆம் தேதி திரு ஆடிப்பூரம். அம்மனுக்கு கண்ணாடி வளையல் வாங்கிக் கொடுக்கலாம். கோவிலுக்கு வரும் பெண்களுக்கு கண்ணாடி வளையல் வாங்கித்தர நன்மை நடைபெறும். ஆண்டாள் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது.

ஜூலை 26 பட்சி ராஜன் கருடாழ்வார் ஜெயந்தி ஆடி சுவாதி சுந்தரமூர்த்தி நாயினார் குருபூஜை

ஜூலை 27ஆம் தேதி சஷ்டி திதி முருகப்பெருமானை வழிபடலாம். வாஸ்து நாள் கட்டிடம் கட்ட வாஸ்து செய்யலாம். குதம்பை சித்தர் ஜெயந்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+