Aadi Pooram 2025: ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு பூஜை செய்ய, வளையல் மாலை அணிவிக்க உகந்த நேரம் எது?
சென்னை: ஆடி மாதம் 12 ஆம் தேதியான இன்று ஆடிப்பூரம் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அம்பிகைக்கு வளையல் வாங்கி கொடுத்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். அது போல் வளையல் அணிவிக்க எந்த நேரம் உகந்தது என்பதையும் பார்க்கலாம்.
ஆடிப்பூரம் திங்கள்கிழமையான இன்று கொண்டாடப்படுகிறது. பூரம் நட்சத்திரம் நேற்று (ஜூலை 27ஆம் தேதி) மாலை 6.55 மணிக்கு தொடங்கி, இன்று (ஜூலை 28ஆம் தேதி) இரவு 8 மணி வரை இருக்கிறது.

இன்றைய தினம் சதுர்த்தி திதியும் வருவதால் விநாயகர், ஆண்டாள், அம்பாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது. ஆண்டாள் நாச்சியார் அவதரித்தது ஆடிப்பூரத்தின் போதுதான் என்பது கூடுதல் சிறப்பு!
ஆடிப்பூரத்தின் போது அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழா நடத்துவார்கள். ஆடிப்பூரத்தன்று அம்மனை முழுவதுமாக கண்ணாடி வளையல்களில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். வழிபாடு முடிந்ததும் அந்த கண்ணாடி வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக கொடுப்பது வழக்கம். அந்த வளையலை நாம் அணிந்தால், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அது போல் திருமணத் தடை இருப்போருக்கு நீங்கி திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பூரத்தன்று அம்மன் கோயில்களில் கண்ணாடி வளையல் வாங்கிக் கொடுத்தால் அம்பிகை நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வளங்களையும் நிச்சயம் தருவாள்.
27 நட்சத்திரங்களில் 11 ஆவது நட்சத்திரமாக வருவது பூரம் நட்சத்திரம். இது சிம்ம ராசிக்குரிய நட்சத்திரம். கிரகங்களில் செல்வ செழிப்பு, சுக போக வாழ்க்கைக்கு காரணமாக இருக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். அவரை அதிபதியாக கொண்ட நட்சத்திரம்தான் பூரம்.
ஆடி பூரத்தன்று அம்பிகையை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும். இன்று நாக சதுர்த்தியும் சேர்ந்து வருகிறது. எனவே இந்த ஆடிப்பூரத்தன்று நாகதேவதைகளையும் வணங்குவது நல்லது. ஆடிப்பூரத்தன்று வழிபாடு நடத்த உகந்த நேரம் காலை 6 மணி முதல் 7.20 மணி வரை, 9.10 முதல் 10.20 மணி வரையும் ஆகும்.
இந்த ஆடிப்பூரத்தன்று வளையல்களை மாலையாக கோர்த்து அம்மனுக்கு அணிவிக்கலாம். அப்போது குழந்தை பேறு வேண்டுவோர், அம்மனிடம் மனமுருகி வழிபட வேண்டும். விரைவில் வளைகாப்பு வளையல் அணிந்து கொள்ளும் பாக்கியத்தை தரும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். இது போல் திருமணத்திற்கு வேண்டிக் கொள்வோர், நலங்கு வைத்து வழிபட வேண்டும்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications