ஆவணி பௌர்ணமி.. திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தென்னக ரயில்வே குட் நியூஸ்
திருச்சி: ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக வேலூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில்கள் சென்னை கடற்கரை சாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுகிறது. சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.

14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட திருவண்ணாமலை, மலையில் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவர். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.
வரும் 30ஆம் தேதி ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பௌா்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, வேலூா் - திருவண்ணாமலை முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06127) ஆகஸ்ட் 30 ஆம் தேதி வேலூரில் இரவு 9.50 மணிக்குப் புறப்பட்டு கனியம்பாடி, கன்னமங்கலம், ஆரணி, போளூா், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடையும்.
மறுமாா்க்கமாக, திருவண்ணாமலை - வேலூா் முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06128) ஆகஸ்ட் 31 ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழியாக வேலூருக்கு அதிகாலை 5.35 மணிக்கு வந்தடையும். இந்த ரயில்கள் சென்னை கடற்கரை சாலை வரை நீட்டிக்கப்பட்டு சென்னை கடற்கரை சாலை - வேலூா் - சென்னை கடற்கரை (06033, 06034) ரயில்களாக இயக்கப்படும்.
விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயிலானது (06129) ஆகஸ்ட் 30 ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூா், திருக்கோயிலூா், ஆதிச்சநல்லூா், அண்டபள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு முற்பகல் 11 மணிக்கு வந்தடையும்.
மறுமாா்க்கமாக, திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயிலானது (06130) ஆகஸ்ட் 30 ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு தண்டரை, அண்டபள்ளம், ஆதிச்சநல்லூா், திருக்கோயிலூா், அயந்தூா், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் வழியாக விழுப்புரத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும்.
இந்த ரயில்கள் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டு மயிலாடுதுறை - விழுப்புரம் - மயிலாடுதுறை ( 06690, 06691) ரயில்களாக இயக்கப்படும்.
விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06131) வரும் 30 ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 க்கு சென்றடையும்.
மறுமாா்க்கமாக, திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06132) ஆகஸ்ட் 31-ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு, விழுப்புரத்துக்கு காலை 5 மணிக்கு வந்தடையும். இந்த ரயில்கள் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டு தாம்பரம் - விழுப்புரம் - தாம்பரம் (06028, 06027) ரயில்களாக இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications