"முருகனை பார்க்கணும்னு தோணுச்சு வந்தேன்" லைட்டான சால்ட் பெப்பர் தாடியுடன் திருச்செந்தூர் வந்த நடிகர்
சென்னை: சினிமா தயாரிப்பாளராகவும் நடிகராகவும் நடிகர் சங்கத் தலைவராக உள்ளவருமான நடிகர் விஷால், திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். உடன் ஆதீனமும் இருந்தார்.
நடிகர் விஷால் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நேற்று வந்தார். அவர் திருச்சி ஆதீனத்துடன் இணைந்து சுவாமியை தரிசனம் செய்தார். அலங்கார தீபாராதனை, மூலவர் பூஜை, சத்குரு மூர்த்தி, சண்முகர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

வெளியில் உள்ள சண்முகர் மண்டபத்தில் நீண்ட நேரம் சுவாமி தரிசனம் செய்த பிறகு அங்கிருந்து ஆதீனத்துடன் புறப்பட்டார். கோயிலில் ஏராளமான பக்தர்கள் விஷாலுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த விஷால், "முருகனை பார்க்கணும்னு தோணுச்சு அதான் வந்தேன்" என கூறினார். இதையடுத்து அவர் அங்கிருந்து பேட்டரி காரில் புறப்பட்டுச் சென்றார். சென்னையை சேர்ந்தவர். இவர் நடிகராவதற்கு முன்பு நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.
தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டி, ஜானகி தேவி , விஷாலின் தாய், தந்தை ஆவார்கள். இவர் பிறப்பால் தெலுங்கர். ஆனால் தமிழ் திரைப்படங்கள் மூலமே பிரபலமடைந்தார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். இவர் லயோலா கல்லூரியில் படித்தவர். சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக இருந்த நிலையில் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார்.
விஷால் வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யாததால் இவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாகத் திகழ்கிறது திருச்செந்தூர். இந்த கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் என குறிப்பிடப்படுகிறது.
சென்னையிலிருந்து 600 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த கோயில் 3000 ஆண்டுகள் பழமையானது. முருகனுக்கு கடற்கரைக்க ஓரத்தில் கோயில் அமைந்திருப்பது இதுவாகும். இந்த கோயில் அமைந்துள்ள இடம் திருச்சீரலைவாய் என அழைக்கப்பட்டது.
முருகன் சூரனனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் செயந்திரநாதர் என அழைக்கப்படுகிறார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது. மலைக் கோயிலின் கோபுரம் 152 அடி உயரம் கொண்டது. இங்குள்ள சிவன் லிங்கத்திற்கு ஆராதனை காட்டிய பிறகே முருகனுக்கு காட்டுவார்கள்.
-
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சூப்பர் மாற்றம்.. தென் மாவட்ட மக்களுக்கு பெரிய நிம்மதி! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications