அக்னி நட்சத்திரம் 2023.. வாட்டி எடுக்கும் கோடை கால நோய்கள்..தப்பிக்க என்ன செய்யலாம்?
சென்னை: அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கப்போகிறது. கோடை காலத்தில் நோய்களும் வரிசைகட்டும். சிறுநீரக கோளாறுகள், நீர் சுருக்கு, கொப்புளம், அம்மை, அக்கி போன்ற நோய்பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. கோடை கால நோய்களான வேனல் கட்டி, அம்மை, கண் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
கோடை காலம் வந்தாலே தண்ணீர் பந்தலும் நீர் மோர் பந்தலும் வைத்து தானம் செய்வார்கள். தேர்தல் காலமாக இருந்தால் அரசியல்வாதிகள் தண்ணீர் பந்தல், ஐஸ் சர்பத், பழங்கள் என தானம் செய்வார்கள். அக்னி நட்சத்திர காலத்தில் தண்ணீர், நீர் மோர், விசிறி உள்ளிட்ட பொருட்களை தானம் செய்வதன் மூலம் கோடை கால நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.
சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான கத்திரி வெயில் எனப்படுகிறது. சந்திரன் சஞ்சாரம் இந்த ஆண்டு 4-5-2023 முதல் 29-5-2023 வரை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. சித்திரை மாதம் மேஷம் ராசியில் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்திற்குள் சூரியன் நுழையும் காலம் முதல் ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதம்வரை சூரியன் சஞ்சரிக்கும் கால அளவினை அக்னி நட்சத்திர காலம் என்கின்றனர்.

கத்திரி வெயில் காலத்தில் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கும். தலையில் படும் நேரடி வெயிலினால் மூளை நரம்புகள் பார்வை நரம்புகள் போன்றவை பாதிக்கப்பட்டு பித்தம் அதிகரித்த நிலையில் ஒற்றை தலைவலி மற்றும் பார்வை கோளாறுகள்,முடி கொட்டுதல் ஏற்படும். ஜோதிட ரீதியாக கோடை காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.
கோடையில் ஏற்படும் நோய்களுக்கு முக்கூட்டு கிரகங்களான சூரியன்+புதன்+சுக்கிரன் ஆகிய மூன்று கிரங்களோடு செவ்வாயும் சேர்ந்து அதிக விளைவுகளை ஏற்படுத்தினாலும் அனேக வியாதிகளுக்கு சுக்கிரனே காரணமாக அமைந்துள்ளது. தற்போது மேஷ ராசியில் சூரியன், புதன் ராகு கூட்டணி அமைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் சுக்கிரனும் செவ்வாயும் மிதுனத்தில் கூட்டணி சேருவார்கள் இந்த கிரங்களின் கூட்டணி மக்களுக்கு பலவித நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன், சூரியன், சுக்கிரன், புதன் எப்படி அமைந்துள்ளது என்பதைப் பொருத்தே சரும பிரச்சினையும் சரும நோய்களும் ஏற்படுகிறது. சந்திரன் மனதிற்கு காரகர். மன அழுத்தம் ஏற்பட்டால் சருமம் வறட்சியடைகிறது. இதனால் தோல்நோய்கள் எளிதாக ஏற்படுகிறது. தூக்கக் குறைபாடும் ஏற்படுகிறது. எனவே அதிக அளவில் தண்ணீர் பருகவேண்டும். இயற்கையான பழ ஜூஸ்களை குடிக்கலாம்.
சரும நோய்களுக்கு சுக்கிரன்தான் காரகம். கோடை நோய்களுக்கு காரக கிரகமான சுக்கிரனே அதற்கான தீர்வையும் காட்டுகிறார். கோடை நோய்களை தவிர்க்க சுக்கிரனின் அம்சமான சுத்தமான குடிநீரை நிறைய குடித்துவந்தாலே பல பல வியாதிகளை தவிர்த்துவிடலாம் என ஆயுர்வேதமும் மருத்துவ ஜோதிடமும் கூறுகிறது. சுக்கிரனை காரகமாக கொண்ட இளநீரை கோடை காலத்தில் அதிகம் குடிக்கலாம்.
கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பை தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்தவேண்டும். கோயில்களில் இறைவன், இறைவிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் செய்வதும் கண்குளிர காண்பதும் சிறப்பு. அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கலாம்.

மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் அபிஷேகத்திற்கு இளநீர், தேன், சர்க்கரை,பூக்கள் போன்றவை வாங்கி கொடுக்கலாம் பாதிப்புகள் குறையும். ஏழைகள், அந்தணர்கள் இயலாதவர்களுக்கு விசிறி, காலணி, குளிர்ந்த நீர், மோர், இளநீர், பானகம், தயிர்சாதம் கொடுப்பது விசேஷம். முடிந்தால் பறவைகள், ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு குடிக்க தண்ணீர் வைக்கலாம்.
அக்னி நட்சத்திர காலத்தில் தான தருமம் செய்வதோடு முருகனையும், அன்னை மீனாட்சியையும் வழிபடலாம். பரணி நட்சத்திரத்திற்கு உரிய தேவதையான துர்க்கையையும், கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவன்,ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய பிரம்மாவையும் வழிபடலாம். முருகன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
உஷ்ணநோய் பாதிக்காமல் இருக்க, பச்சரிசி மாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு, 'அஸ்வத் த்வஜாய வித்மஹே! பாஸ ஹஸ்தாய தீமஹி! தன்னோ சூர்ய ப்ரசோதயாத்!' என சூரிய காயத்ரி மந்திரம் சொல்லி வழிபடுவது சிறப்பு. பாஸ்கராய வித்மஹே! மஹத் யுதிகராய தீமஹி! தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத் என்று கூறி சூரியனை வழிபட வெப்பத்தால் வரக்கூடிய நோய் பாதிப்புகள் நீங்கும்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications