Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்சய திருதியைக்கு தங்க நகைகள் இருக்கட்டும்.. கல் உப்பு வாங்கியாச்சா?அட்சய திருதியை நாளில் அன்னதானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது ஏன்? ஆனால், தங்கம் வாங்குவதை விட தானம் செய்வதால் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும் என்கிறார்களே உண்மையா? அட்சய திருதி நாளின் சிறப்புகள், முக்கியத்துவம் என்னென்ன? அட்சய திருதி நாளில் என்னென்ன புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்? இந்நாளில் தர்ப்பணம் கொடுப்பதன் சிறப்புகள் என்னென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

அமாவாசைக்கு பிறகு வரும் 3ம் நாளையே திரிதியை திதி என்பார்கள்.. சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதியை என்பார்கள்.. அட்சய என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அதனால்தான், இந்த நாளை சிறப்பித்து பலரும் கொண்டாடுவார்கள்.

இதற்கு பின்னணியில் பல்வேறு புராண காரணங்களும் உள்ளன.. கிருதயுகம் பிறந்ததும் அட்சய திருதியை தினத்தன்றுதான்.. கங்கா நதி வானுலகத்திலிருந்து பூமியை தொட்டதும் இந்த நாளில்தான். மகாபாரதத்தில் வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை நாளில்தான்.. மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றதும் இந்நன்னாளில்தான்.

அட்சய திரிதி நன்னாளின் சிறப்பு

குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும் அட்சய திரிதியையில்தான் பெற்றானாம்.. குசேலன் தன்னுடைய பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன்னுடைய வறுமையைப் போக்கியதும் இந்த அட்சய திரிதி நாளில்தானாம்.பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி, முதன்முதலில் காய்கறி, மூலிகை செடிகளை இந்த பூமியில் உருவாக்கியதும், இந்த நாளில்தான். ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.

அட்சய திருதியை தினத்தன்று ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நடந்துள்ளன.. அதேபோல, விஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமர் அவதரித்ததும் இந்த நாளில்தான்.. மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்கா இடம்பிடித்த நாளும் இதுவேதான்..

குபேரன் நிதி கலசங்களை பெற்றதும் இதே நாளில்தான். கேரள சொர்ணத்து மனையில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த திருநாளும் இந்த அட்சய திரிதி நாள்தான்.கௌரவர் சபையில் பாஞ்சாலி ஆடையை துச்சாதனன் உருவும்போது, "அட்சய" என கண்ணன் சொன்னதுமே, பாஞ்சாலியின் சேலை வளர்ந்து அவள் மானம் காத்த நாளும் இந்த அட்சய திரிதி தான்-. பரசுராமர் அவதரஅவதரித்த நாளும் இதுதான்.

வடமாநில மக்களின் நம்பிக்கை

வடமாநில மக்கள் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்... பீகார், உத்தரபிரதேசத்தில் அட்சய திருதியை நாளில்தான் நெல் விதைப்பார்கள். அதேபோல, ஹரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இன மக்கள், அட்சய திருதியை தினத்தன்றுதான், மண் வெட்டியுடன் வயலுக்கு கிளம்பி போவார்களாம்.. நீண்டதூர புனித பயணங்களை மேற்கொள்வதானாலும், இந்த அட்சய திருதியை நாளில் தான் மேற்கொள்வார்கள்.

ஒரிசாவில் வீடு கட்டுவதும், கிணறு தோண்டுவதும் அட்சய திருதி நாளில்தான் செயல்படுத்தப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை நாளில், விநாயகரையும், லட்சுமியையும் வணங்கிவிட்டு, புது கணக்கு ஆரம்பிப்பார்கள்..

அட்சய திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நம்முடைய மூதாதையர்களுக்கும் போய் சேருமாம்.. எனவே, அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் முக்கியத்துவம் நிறைந்ததாக உள்ளது.. எனவே, அட்சய திருதியை நாளில் எள்ளும் தண்ணீரும் அளித்து முன்னோரை வணங்கலாம்.. இந்நாளில் நீர் நிரம்பிய குடத்தை தானமாக தரலாம்.

தங்கம் குறைவின்றி பெருகும்

அட்சய திரிதியை தினத்தில் செய்யப்படும் எந்தவொரு நல்ல காரியமும் அதிக பலன்களை பெற்றுத்தரும் என்பர். அதனால்தான் அட்சய திருதியை நாளில் எந்தவொரு முயற்சியும் தொடங்கினாலும் அது வெற்றி பெறும் என்று நம்பிக்கையாக உள்ளது. அந்தவகையில், ஒரு வியாபாரத்தை துவங்குவது, கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்வது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் மேற்கொள்ளலாம்.

இந்த நாளில் தானம் செய்வது, தங்கம் வாங்குவது, வீடு தானம் செய்வது மற்றும் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.. இந்த குறிப்பிட்ட நாளில் எந்த பொருள் வாங்கினாலும், அது வீட்டில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கையாகும்.. அதேபோல, நாம் செய்யும் நல்ல காரியங்களும் பல மடங்காக பெருகுமாம்..

இதை கருத்தில் கொண்டுதான், தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.ஆனால், எல்லாராலுமே தங்க நகையை வாங்க முடியாது.. ஆனால, தான தர்மங்களை செய்யலாம்.. அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள் செய்வதால், அந்த புண்ணியங்கள் வருங்கால சந்ததிக்கு போய் சேரும்.. அட்சய திருதியன்று தானம் செய்தால், மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது நம்பிக்கை..

கல் உப்பு கட்டாயம்

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க முடியாமல் போய்விடுகிறதே என்ற ஏக்கமும், கவலையும் வேண்டாம்.. தங்கம் அளவுக்கு இல்லாவிட்டாலும், கல் உப்பு கண்டிப்பாக அட்சய திரிதியை நாளில் வாங்கிவிட வேண்டும். அதேபோல, ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம்... ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம்.

ஏனென்றால், சிவபெருமான் பிச்சைகாரர் வேடத்தில் வந்து அன்னபூரணியிடம் தனது பிச்சை பாத்திரத்தில் உணவு வாங்கி சென்ற நாள் இதுவாகும்.. எனவேதான், அன்னதானத்தை முன்னோர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.. அட்சய திருதியை நாளில் அரிசி, உப்பு, போன்றவற்றை வாங்குவது போலவே, தானமும் வழங்குவார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், குறைவில்லாமல் கொடுப்பதே நிறைவோடு வாழ உகந்த செயல் என்பதுதான், இந்த அட்சய திருதி நாளில் உணர்த்தப்படும் செயலாகும்.

குடை, செருப்பு, நீர்மோர்

அதேபோல, கோயில்களுக்கு ஏதாவது பூஜைக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி தரலாம். வயதானவர்களுக்கு குடை, செருப்பு வாங்கி தரலாம். நீர்மோர் வழங்கலாம். மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் வழங்கலாம். மாணவர்களுககு கல்விக்கு உதவினால் நம்முடைய குழந்தைகளுக்கும் கல்வியில் உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ, வைத்து தரலாம்..அட்சய திருதியை நாளில் சிலர் மாடுகளை வாங்குவார்கள்.. பசு மாடுகளை வாங்கி லட்சுமி தேவியின் பாதத்தில் காணிக்கையாக செலுத்தினால் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்.

மண் பானைகள் - குடங்கள்

தங்கம் வாங்க முடியாவிட்டால், அந்த நாளில் உங்கள் ராசிக்கு ஏற்றவாறு மற்ற உலோகங்களை வாங்கலாம்.. அதேபோல, பித்தளை பாத்திரங்களை வாங்கினால், செல்வம் பெருகும். மங்களகரமான விஷயமாக கருதப்படும்.. அதேபோல, அட்சய திருதியை நாளில் கடுகு வாங்கினால் வரலட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.. மண் பானைகளை, குடங்கள், விளக்குகள் வீட்டிற்கு கொண்டு வரலாம். இது குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தை அதிகப்படுத்தும்.

அதேபோல, கணவன் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யும் மனைவிகள் லட்சுமி தேவிக்கு பூஜை செய்து குங்குமத்தை இந்த நாளில் தானமாக வழங்குவார்கள்.. எனவே, அட்சய திருதி என்றாலே அது தங்கம் வாங்குவதற்கு மட்டுமல்ல, தானங்களை பிறருக்கு தந்து, புண்ணியத்தை பெறுவதாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+