ஆடி அமாவாசை.. தடைகளை தரும் நீத்தார் கடன்.. பித்ரு தோஷம் தீர தர்ப்பணம் தருவதன் முக்கியத்துவம்
சென்னை: மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு நீத்தார் கடன் கொடுப்பது அவசியமாகும். பித்ரு கடனை நிவர்த்தி செய்யாமல் நாம் செய்யும் எந்த ஒரு பூஜையோ பரிகாரமோ வேலைக்கு உதவாது, பலனும் தராது. ஆகவே தான், நாம் முதலில் பித்ரு கடன் போக்கி தோஷம் நீக்க வேண்டியது அவசியமாகும். அமாவாசை தினமான இன்றைய தினம் நாம் நம்முடைய முன்னோர்களின் பசியை போக்க வேண்டும்.
பித்ரு கடன்: நம்முடைய முன்னோர்கள் கொடுக்கும் சாபமானது தெய்வத்தின் அருளையும் கூட தடை செய்யும் சக்தி பெற்றது. முறையாக பித்ரு கடன்களை செலுத்தாவிட்டால், நம்மை படைத்த கடவுளால் கூட நமக்கு கருணை காட்ட முடியாது. அவ்வளவு வலிமையானவர்கள் நம்முடைய பித்ருக்கள் தான். எனவேதான் அமாவாசை நாட்களில் தவறாமல் பித்ரு கடன் செய்து தானம் கொடுக்க வேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பாவ புண்ணியங்கள்: மனிதனாக பிறந்த ஒவ்வொரும், தான் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறே மீண்டும், மீண்டும் மறுபிறவி எடுத்து, முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலா பலன்களை அனுபவித்து வாழ்ந்து மடிந்து கடைசியில் இறைவனோடு கலந்து விடுகிறான். ஒரு ஆன்மா மனிதனாக பிறவி எடுத்து, பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலா பலன்களை அனுபவித்துவிட்டு இறந்து போனால், இறந்த உடனேயே மீண்டும் ஒரு மனிதப் பிறவி எடுப்பது கிடையாது. இறந்த பின்பு ஆன்மாக்களின் உலகம் எனப்படும் பித்ரு லோகத்திற்கு சென்று, அங்கேயே தங்கியிருந்து, தனக்காக தன்னுடைய வாரிசுகள் செய்யும் பித்ரு கடன் எனப்படும் தர்ப்பணத்தை பெற்றுக்கொள்ளும் வரை ஆன்மாவாகவே சுற்றித் திரியும்.
முன்னோர் வழிபாடு: பித்ரு என்பது, இறந்துபோன நமது தந்தை, தாய், உள்ளிட்ட முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழி மற்றும் தாய் வழி சொந்தம் என இறந்துபோன நம்முடைய அனைத்து முன்னோர்களுமே நமது பித்ருக்கள் தான். நமது தந்தை வழியில் இறந்து போன முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் என்றும், தாய் வழியில் இறந்த முன்னோர்கள் அனைவரும் மாத்ரு வழி பித்ருக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். சுருக்கமாக சொல்வதென்றால், நமது ரத்த சொந்தத்தில் இறந்து முன்னோர்கள் அனைவருமே பித்ருக்கள் தான்.
முன்னோர்களின் ஆசி: நம்முடைய உடல், பொருள், ஆன்மா அனைத்துமே, நம்முடைய பித்ருக்கள் நமக்கு அளித்த பிச்சை தான். அவர்கள் போட்ட பிச்சையில் தான் நாம் இவற்றை சுகபோகமாக அனுபவித்து வருகிறோம். அப்படி நாம் அனுபவிக்கும் போது, அந்த பித்ருக்கள் செய்த பாவ புண்ணியத்தையும் சேர்த்தே தான் நாம் அனுபவித்து வருகிறோம். நம்மோடு வாழ்ந்து மறைந்துவிட்ட நமது முன்னோர்களான பித்ருக்கள் அனைவருமே, நாமும் நம்முடைய சந்ததிகளும் நலமுடன் வாழவேண்டும் என்று தான் விரும்புவார்கள். எனவே தான், அவர்கள் உயிரோடு இருந்தபோது, அவர்களை முறையாக பேணி காத்து அவர்களின் பசியை போக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் இறந்த பிறகாவது அவர்களின் பசியை போக்கி அவர்களின் ஆன்மாவை சாந்தப்படுத்த வேண்டும். இது தான் பிதுர்க்கடன் என கூறப்படுகிறது.
முன்னோர்களுக்கு வழிபாடு: நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் பித்ரு கடன் வழிபாடு என்பது பழந்தமிழர்களின் மூதாதையர் வழிபாட்டு முறையாகும். இந்த வழிபாடு தற்போது மறைந்து வருகிறது. ஆனால், கிராமங்களில் இன்றும் இந்த மூதாதையர் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நம்முடைய முன்னோர்கள் எப்போதுமே நம்முடைய நலனில் பெரிதும் அக்கறை கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
அமாவாசையில் நீத்தார் கடன்: அமாவாசை திதியன்று நாம் முறையாக பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்கவேண்டும். இல்லாவிட்டால், பசியோடும் வருத்தத்துடனும் பிதுர்லோகம் சென்று விடுவார்கள். இது பித்ரு கடனாக மாறும். பித்ரு கடன் இருந்தால் நமக்கு நிறைய தடைகள் ஏற்படும். நம்மை படைத்த கடவுளால் கூட நமக்கு கருணை காட்ட முடியாது. அவ்வளவு வலிமையானவர்கள் நம்முடைய பித்ருக்கள் தான். ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள தோஷத்திலேயே மிகக் கடுமையான தோஷமே பித்ரு தோஷம் தான். பித்ரு தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு முதல், வேலை, தாம்பத்ய வாழ்க்கை, குழந்தை என இவற்றில் ஏதாவது ஒன்றில் தீராத பிரச்சனையும் சிக்கலும் இருந்து வரும். நாம் முறையாக பித்ரு கடன் செய்து அவர்களின் பசியை போக்கி அவர்களை சாந்தப்படுத்த வேண்டும்.

பித்ரு தோஷம்: பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்யாமல் நாம் செய்யும் எந்த ஒரு பூஜையோ பரிகாரமோ வேலைக்கு உதவாது, பலனும் தராது. ஆகவே தான், நாம் முதலில் பிதுர் தோஷத்தை போக்கிட வேண்டியது அவசியமாகும். பித்ரு தோஷம் நீங்கினால்தான் தடைகள் நீங்கி வீட்டில் எந்த நல்லதும் நடைபெறும். நமது பித்ருக்கள் தான், நமக்கும் இறைவனுக்கும் நடுவில் இருந்து இறைவின் அருளாசியை நமக்கு பெற்றுத் தருவதோடு, நமது வேண்டுதல்களையும் இறைவனிடம் கொண்டு சேர்த்து வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தருவார்கள். நம்மை தேடி வரும் நமது முன்னோர்களுக்கு நாம் முறையாக செய்யும் வழிபாடு தான் பித்ருகடன் அல்லது தர்ப்பணம் என கூறப்படுகிறது.
முன்னோர்களின் பசி போக்குவோம்: நம் மீதும் நம்முடைய சந்ததிகள் மீதும் அதிக அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவரிகளின் பசியைப் போக்க வேண்டியது நமது கடமையாகும். அப்படி இல்லாமல் பித்ருக்களின் பசியை போக்காமல், அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு நாம் ஏன் மரியாதை செலுத்த வேண்டும் என்று உதாசீனப்படுத்தினால், நமது பித்ருக்கள் பசியால் வாடுவர். அப்படி பசியால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசை திதியிலும் நமது வீட்டிலுள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவார்கள். சிலர் காக வடிவத்திலும் நம்மை தேடி வருவார்கள். ஆடி அமாவாசை தினமான இந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு உணவிட்டு எள்ளும் தண்ணீரும் இறைத்து வணங்குவோம்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications