முன்னோர்களுக்கு படைக்கும் உணவு.. அமாவாசைக்கு சமையலில் பயன்படுத்தக்கூடாத காய்கறிகள்? சேர்க்க கூடியவை?
சென்னை: தை அமாவாசை தினமான இன்று, முன்னோர்களுக்கு திதி தருவது அவசியமாகும்.. முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து முன்னோர்களின் புகைப்படத்துக்கு வைத்து படைப்பார்கள். அந்தவகையில், அமாவாசையில் சமையலில் சேர்க்கப்படும் காய்கறிகள், தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என்னென்ன தெரியுமா?
நேற்று ஜனவரி 28ம் தேதி இரவு 08.10 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் தேதி இரவு 07.21 வரை அமாவாசை திதி வருகிறது.. அதுபோலவே, ஜனவரி 29ம் தேதி அன்று காலை 09.21 மணிக்கு துவங்கி, ஜனவரி 30ம் தேதி காலை 08.59 வரை பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரமும் உள்ளது.

இன்றைய தினம், நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்பார்கள். எனவே, வீட்டு வாசலில் முன்னோர்கள், எள்ளும், தண்ணீரும் பெறுவதற்காகவே காத்து கொண்டிருப்பார்களாம்.. எனவே, தர்ப்பணத்துக்காக கருப்பு எள்ளை மற்றவரிடம் கடனாக வாங்கக் கூடாது.
அந்தணர்கள்: இன்றைய தினம் எறும்பு, பசு, காகம், நாய், பூனை, அந்தணர்களுக்கு உணவளிக்கலாம்.. ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். முக்கியமாக, சாப்பாடு, கருப்பு உளுத்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, ஆடைகள் போன்றவற்றை தானம் தருவது, மிகச்சிறந்த புண்ணியமாக கருதப்படுகிறது.
இன்று சமையலில் வெங்காயம் பூண்டு சேர்த்துக் கொள்ளக் கூடாது. எப்போதுமே அமாவாசையன்று சமைத்த உணவுகளை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அதாவது, ரத்த சம்பந்தப்பட்டவர்கள் மட்டும்தான் சாப்பிட வேண்டும். பிற நபர்களுக்கு அமாவாசை தினத்தில் சமைத்த சாப்பாட்டை தரக்கூடாது என்பார்கள். ஆனால், அன்னதானம் செய்யலாம்.
சமையல் காய்கறிகள்: தை அமாவாசையில், முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து, அவைகள் அனைத்தையும் முன்னோர்களின் போட்டோக்களுக்கு முன்பு வைக்க வேண்டும்.. அந்த போட்டோக்களுக்கு பொட்டு வைத்து, பூ வைத்து, சமைத்து உணவுகளை படைக்க வேண்டும். பொதுவாக, அமாவாசையில் சமைக்கும்போது, சில காய்கறிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும், சிலவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்பார்கள்.
அந்தவகையில், நெல்லிக்காய், அவரக்காய், புடலங்காய், பயத்தங்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், சக்கரவள்ளி, சேனை, சேப்பங்கிழங்கு, பிரண்டை, மாங்காய், இஞ்சி, மாங்கா இஞ்சி, பாரிக்காய் போன்றவற்றை அமாவாசையில் பயன்படுத்தி சமைக்கலாம். இதில் வாழைக்காய் மிக மிக முக்கியமானதாகும்.. வாழையடி வாழையாக நமது குலம் வளர வேண்டும் என்பதற்காக வாழைக்காய் பயன்படுத்தப்படுகிறது..
அகத்திக்கீரை: அதேபோல, அமாவாசைக்கு முட்டைகோஸ், நூக்கல், முள்ளங்கி, பீன்ஸ், உருளைகிழங்கு, காரட் தவிர்க்கலாம்.. இதில் கீரைகளில் அகத்திக்கீரை மட்டும் செய்யலாம். தர்ப்பணக் காலங்களில் பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்க்கக் கூடாது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications