Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோல் நோய் தீர்க்கும் சந்திரசேகர சுவாமி.. இழந்ததை தரும் மானேந்தியவல்லி! குந்தவை கட்டிய கரூர் கோவில்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் அருகே ராஜா ராஜா சோழனின் மூதாதையரான பூதி ஆதிச்சம்பிடாரி எனும் பெரியகுந்தவை நாச்சியார் கட்டிய சந்திரசேகர சுவாமி - மானேந்திய வல்லி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வேண்டினால் தோல் நோய் தீரும் எனவும், இழந்ததை தருவார் அம்மன் என்கின்றனர் ஆன்மீக பக்தர்கள்..

இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இருந்தாலும் தமிழகம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அறிவியல் தொடங்கி ஆன்மீகம் வரை தமிழகத்திற்கு எப்போதுமே தனி இடம் தான்.

spirituality Karur Chandrasekarar Temple

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கோவில்கள் இருக்கும் மாநிலம் என்றாலும் அது தமிழ்நாடு தான். இங்கு மட்டும் 24 ஆயிரத்திற்கும் மேலான சிவன் கோயில்கள் உள்ளன. அதில் 247 தலங்கள் சமயக் குரவர்களால் பாடல் பெற்றது. திருப் புகழ் பாடல் பெற்ற தலங்கள் 106 உள்ளது.

அதுமட்டுமல்லாமல் பெருமாளுக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் அம்மன், பிற தெய்வங்களுக்கு பத்தாயிரம் கோயில்கள் இருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. அக்னி ஸ்தலங்களில் சிவபெருமான் வசித்து வந்தாலும், சுயம்புவாக பல கோவில்களில் எழுந்தருளியுள்ளார்.

அப்படி ஒரு கோவில்தான் திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் இருக்கும் திருச்செந்துறை அருள்மிகு சந்திரசேகர சுவாமி - மானேந்தியவல்லி அம்மன் கோவில். திருச்சியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உறையூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோவில் உள்ளது. இதனை கட்டியவர் ராஜராஜ சோழனின் மூதாதையர் ஆன பூதி ஆதிச்சம்பிடாரி எனும் பெருங்குந்தவை நாச்சியார். ராஜராஜ சோழனின் பாட்டனார் பராந்தகச் சோழர் திருச்சி உறையூரை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார்.

அப்போது காவிரி ஆற்றின் கரைப் பகுதிகளில் அடர்ந்த காடுகள் இருந்ததால் கொள்ளையர்களின் தொல்லை பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதை அடுத்து ஒரு பௌர்ணமி தினத்தன்று கொள்ளையர்களை பிடிக்க பராந்தகச் சோழர் தனது படைகளை திரட்டி கொண்டு சென்றார். அப்போது பலா மரங்கள் நிறைந்த திருச்செந்துறை பகுதிக்கு வந்த போது திருடர்கள் தப்பி ஓடினர். இதை அடுத்து மான்கள் இருந்ததால் அவற்றை வேட்டையாடினார்.

அப்போது ஒரு மான் பலாமரப் பொந்தில் ஒளிந்த நிலையில் அதில் அம்பெய்தி இருக்கிறார். பலா மரத்திலிருந்து ரத்தம் வந்தது. மான் தான் இருக்கும் என சென்றபோது திடீரென ஒரு குரல் கேட்டது. இந்த மரத்தில் சுயம்பு வடிவில் நான் இருக்கிறேன். எனக்காக ஒரு கோவில் கட்டு என சிவபெருமான் கட்டளையிட்டார். ஆனால் அந்த கோவிலை கட்டவில்லை.

பராந்தகச் சோழருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த பெரிய குந்தவை நாச்சியார் பராந்தகச் சோழனிடம் சிவபெருமான் கூறியதை கேட்டு கோவில் கட்ட முடிவெடுத்தார். பௌர்ணமி அன்று சிவபெருமான் பேசியதால் அந்த கோவிலுக்கு சந்திரசேகரர் என பெயர் சூட்டப்பட்டது. மானை வேட்டையாடும் போது கிடைத்த சிலை என்பதால் மானையும் அங்குசத்தையும் கையில் வைத்திருக்கும் மானேந்திய வள்ளி அம்மன் அங்கு அருள் பாலிக்கிறார்.

இந்த கோவிலில் உடம்பில் தோல் நோய் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து எட்டு திங்கட்கிழமை நெய் தீபம் ஏற்றி சுவாமிக்கு அபிஷேகம் செய்து திருநீரை உடம்பில் தேய்த்தால் தோல் நோய் தீரும் என்பது நம்பிக்கை. சுவாமி அம்மன் சன்னதி அருகே பஞ்சபூத சக்திகளை ஒரு தூணில் அமைத்திருக்கின்றனர். இந்த தூணில் கையை வைத்து வழிபட்டால் நினைத்ததை தருவார் மானேந்தியவல்லி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+