வாஸ்துபடி சப்பாத்தியை எண்ணி சாப்பிடக் கூடாதாமே ? ஐய்யோ இது தெரியாமல் இத்தனை நாள் எண்ணிட்டோமே!
சென்னை: சப்பாத்தி சுடும் போது அவற்றை எண்ணக் கூடாது என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. சப்பாத்திகளை எண்ணி சுட்டால் வீட்டில் பணகஷ்டம் வரும் என்கிறார்கள். என்னென்ன விஷயங்களுக்கு வாஸ்து டிப்ஸ் இருக்கிறது பாருங்கள்!
சப்பாத்தி எனப்படும் உணவு கோதுமை, மைதா உள்ளிட்டவைகளால் செய்யப்படும் ரொட்டி. எண்ணெய் இல்லாமல் சுக்காரொட்டியாகவும் சிலர் சாப்பிடுவது வழக்கம். சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் இந்த சப்பாத்தியை உண்ணுவார்கள்.

இட்லி, தோசையில் கார்போஹைட்ரேட் இருப்பதால் கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தி, கோதுமை தோசை உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிடலாம். பொதுவாக சப்பாத்திகளை சிலர் நிறைய சுட்டு வைத்துக் கொண்டு மறுநாளுக்கு சைட் டிஷ்ஷை மட்டும் ரெடி செய்து சாப்பிடுவார்கள்.
ஒரு சிலர் அந்தந்த நாளுக்கான கணக்கை அன்றே முடித்துவிடுவார்கள். அந்த வகையில் சப்பாத்தி சுடும் போது பெரும்பாலானோர் பர்ஃபெக்ட்டாக வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைகேற்ப மாவு பிசைந்து வைத்து சப்பாத்தியை சுட்டுவிடுவார்கள். ஆனால் சிலர் மாவு பிசைந்து விட்டு அதை உருண்டையாக ரெடி செய்துவிட்டு எண்ணுவார்கள்.
பிறகு வீட்டில் உள்ளவர்களின் தலைக்கு இத்தனை என கணக்கிடுவார்கள். சரியாக இருந்தால் ஓகே. இல்லாவிட்டால் மேலும் மாவு பிசைவார்கள். அது போல் சிலர் உருண்டை பிடிக்கும் போது எண்ணாமல் சப்பாத்தியை சுடும்போது எண்ணுவார்கள். இதைத்தான் வாஸ்து சாஸ்திரப்படி எண்ணக் கூடாது என்கிறார்கள்.
சப்பாத்தி சுடும் போது அவற்றை எண்ணினால் வீட்டில் பிரச்சினைகள் உருவாகி பொருளாதார நிலை பலவீனமடையும் என ஜோதிடர்கள் சொல்கிறார்கள். அது போல் மீந்த சப்பாத்திகளை தூக்கி எறியாமல் பசுக்களுக்கு கொடுக்கலாம். இதனால் நல்ல கர்ம பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அத்துடன் பசுக்களுக்கு முதலில் ரொட்டி கொடுப்பது உங்கள் கிரகத்தை பலப்படுத்துகிறது.
அது போல் நாய்களுக்கும் மீந்து போன சப்பாத்தியை கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதால் ராகு, கேது, சனி பகவானின் தாக்கமும் குறையும் என்கிறார்கள். அதுபோல் ஒரு வீட்டில் இறப்பு ஏற்பட்டால் அவர்களது வீட்டில் சப்பாத்தி செய்யக் கூடாது. அப்படி செய்தால் அந்த குடும்பத்தில் இருப்பவர்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்கிறார்கள். அது போல் இறந்த ஆன்மாவும் முக்தி பெறாது என்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications