1000 ஆண்டு பழமையான அரியலூர் வேதநாராயண பெருமாள் கோயிலுக்கு போங்க! உங்கள் வாழ்க்கையே மாறும்

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேதநாராயண பெருமாள் கோயிலில் நின்ற கோலம், அமர்ந்த கோலம், சயன கோலம் என 3 கோலங்களில் பெருமாள் காட்சி தரும் சிறப்பு வாய்ந்த கோயிலாகும்.

ஸ்ரீபுரந்தான் வேதநாராயணபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.கும்பகோணம் டூ ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் தா.பழுர் மதனத்தூர் இடையே காரைக்குறிச்சி இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் இந்த கோவில் உள்ளது.

ariyalur perumal


இங்கு மூலவராக ஸ்ரீவேதநாராயண பெருமாள், தாயார்: ஸ்ரீதேவி தாயார், ஸ்ரீபூமிதேவி தாயார். நின்றான், கிடந்தான், இருந்தான் என்று முறையே...வரதராஜப் பெருமாள்,ரங்கநாதப் பெருமாள்,வேதநாராயணப் பெருமாள் என 3 கோலங்களில் எழுந்தருளியுள்ளனர்.

ஸ்ரீபுரந்தானில் ஸ்ரீமகாலெட்சுமி பிறந்ததாக புராணம் கூறுகிறது. சோழதேசத்தில் அமைந்த அஸ்டாங்க விமானம் உள்ள ஒரே கோவில் இதுவாகத்தான் இருக்கும். சுமார் 19ம் நூற்றாண்டு கோவில் ஆகும் மிகவும் பழமையான கோவில் ஆகும்.


காஞ்சி வைகுண்ட நாதப்பெருமாள் சன்னதி போன்று இந்த கோயிலுக்கும் சன்னதி அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் லட்சுமி நரசிம்மர் கோவில் தனியாக உள்ளது.

லட்சுமிநரசிம்மர் கோவிலும் மிகவும் பழமையான கோவில் ஆகும். ஸ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திரம் அன்று தரிசனம் செய்யும் போது கடன் நிவர்த்தி ஆகிறது. அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் ஆகும்.

இந்த கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால விரதம் செய்ய ஏற்றதாகும். இந்த காலத்தில் பெருமாளை வணங்குவது புண்ணியத்தை கொடுக்கும். ஏகாதசி விரதத்திற்கு இணையானது இந்த விஷ்ணுபதி புண்ணியகால விரதம்.

ஆண்டுக்கு 4 முறை மட்டுமே இந்த விரத காலம் வரும். அதாவது வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1 ஆகிய நாட்கள் ஆகும். இந்த விரதத்தின் போது பெருமாளை வேண்டினால் உங்கள் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் ஓங்கும். இந்த நாளில் 27 முறை பெருமாளை வலம் வர வேண்டும். இதுதான் இந்த பூஜையின் முறையாகும்.

இந்த கோயிலுக்கு வருகை தருவோர் தொடர்புக்கு--- சீதாராமன் பட்டாச்சார் 9884188030, உப்பிலியப்பன் கோவில் கும்பகோணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+