கத்தை கத்தையா முடி உதிருதா? உடம்பு வெயிட் ஏறிட்டே போகுதா? உடனே ஜாதகத்தை செக் பண்ணுங்க! இதோ பரிகாரம்
சென்னை: உங்களது ஜாதகத்தில் கிரகங்கள் நிலையற்ற தன்மையுடன் காணப்பட்டால், உங்களது உடல் நலனிலும் சிக்கல்கள் எழலாம்.. உடல்நலம் பாதிப்பு மட்டுமல்லாமல் தலைமுடி உதிர்தல் தொந்தரவும் ஏற்படலாம். எனவே ஜாதகத்திலுள்ள கிரகங்களை நிலைநிறுத்த சரியான முறைகளை கையாள வேண்டும். அதேபோல, உடல் எடை மற்றும் தலைமுடி உதிர்தலுக்கு எளிய பரிகாரங்களும் உள்ளன.. அவை என்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
உடல் எடை அதிகரிப்பிற்கு, ஜோதிட ரீதியாக காரணங்கள் இருப்பாக கூறப்படுகிறது. உடல் எடை அதிகரிப்பதற்கு நவகிரகங்கள் காரணமாக அமைகின்றன.
9 கிரகங்களும் மனிதனின் வாழ்வில் தொடர்புடையது.. 9 கிரகங்களில் பாதிப்புக்குள்ளான கிரகத்துக்கு ஏற்றவாறு, உடலில் நோய்கள் அல்லது பாதிப்புகள் ஏற்படுமாம்.

உடல் எடை கூடுகிறதா? குறைகிறதா
அந்தவகையில், ஜாதகத்தில் 5ம் இடத்தை வைத்துதான், ஒருவரின் உடல் எடை கணிக்கப்படுகிறது. குறிப்பாக குரு மற்றும் சந்திரன் ஆகிய 2 கிரகங்கள் தான் காரணம்.. அந்தவகையில், 5ம் இடம் சீரற்று இருந்தால், உடல் எடை கூடியிருக்குமாம். உடல் எடை கூடினாலே, குழந்தையின்மை பிரச்சனை வரை ஏற்பட்டுவிடும்.
குறிப்பாக, 9 வயது முதல் 30 வயதுவரை ஒருவரின் உடல் எடை அதிகரித்தால், இதற்கு ராகு, குருவே பிரதான காரணமாகும்.. ஏனென்றால், ராகுவுடன் இணைந்திருக்கும்போது, குருவின் பலம் அதிகமாகி, அதிக உணவை சாப்பிட தூண்டுமாம்.
சிம்பிள் பரிகாரங்கள் இதுதான்
இதற்கு எளிய பரிகாரங்களும் உள்ளன.. அந்தவகையில், குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, கீரைகளை அதிகமாக சாப்பிட்டால், புதன் பகவானை பலப்படுத்த முடியும். வெந்நீரில் பெருங்காயத்தை கரைத்து குடிப்பதால், சுக்கிரன் சமநிலையில் இருக்கும். அதேபோல, ரத்தினம் போன்ற கற்களை அணியாமல் தவிர்த்தால், குரு பகவான் பலம் குறையும்.
அதேபோல, ஒருவரின் முடி உதிர்தலுக்கும் ஜாதகத்தின் கிரக நிலைக்கும் சம்மந்தம் உண்டு என்கிறார்கள்.. ஒருவரின் ஜாதகத்தில் ராகு மற்றும் புதனின் நிலை மாற்றமடைந்தால், தலைமுடியிலும் உதிர்தல் அதிகமாக இருக்குமாம்.. சுருக்கமாக சொல்லப்போனால், ஜாதகத்தில் புதன் வலுவிழந்திருந்தாலோ அல்லது ஜாதக கட்டத்தில் 6 அல்லது 8 வீட்டில் இருந்தாலோ, சம்பந்தப்பட்டவருக்கு முடி உதிர்வு இருக்கும். அதிலும், புதன் பலவீனமாக இருந்தால் வழுக்கையே விழுந்துவிடுமாம்.
தலைமுடி உதிர்தலை தவிர்க்க என்ன செய்யலாம்
தனுசு அல்லது விருச்சிக ராசியில் ராகு இடம் பெற்று சூரியனின் பார்வையில் இருந்தால் முடி உதிர்தல் அதிகமாகும்.. 7 மற்றும் 8ம் வீடுகளிலோ சனி சஞ்சரித்தாலும் முடி உதிர்வு இருக்கும்.. அதேபோல, ஜாதகத்தில் சூரியன், ராகு, கேது சேர்ந்திருந்தாலும், வழுக்கை உண்டாகும்.
இதற்கும் எளிய பரிகாரங்கள் உள்ளன.. குறிப்பாக, ரூபி கல் பதித்த மோதிரத்தை அணியலாம்.. அதேபோல, மோதிர விரலில் செம்பு மோதிரத்தை அணிவதால், புதன் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் வலுவடைகிறது!!
-
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ












Click it and Unblock the Notifications