Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிம்மதியான தூக்கம் இல்லையா?.. கட்டில் வாங்கும் போது இந்த தவறு மட்டும் செய்யாதீர்கள்.. வாஸ்து டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரவு கண்களை மூடி தூங்கினால் கனவுகள் எதுவும் இன்றி நிம்மதியான உறக்கம் வர வேண்டும். அப்படி இருந்தால்தான் மறுநாள் கண் விழித்து சுறுசுறுப்பாக இயங்க முடியும். நம்முடைய படுக்கை அறையில் என்னென்ன பொருட்களை வைக்கலாம். எந்த மரத்தில் கட்டில் செய்யலாம் எந்த மரத்தில் கட்டில் செய்யக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

படுக்கை அறை வாஸ்து: படுக்கை அறை சரியில்லாமல் இருந்தாலே நோய் பாதிப்பு ஏற்படும் பண இழப்பும் வருமாம். படுக்கையறையின் நடுவில் கதவை வைக்காமல், வடக்கு அல்லது கிழக்கு ஒட்டியே அமைக்க வேண்டும். இதனால் இயல்பான குழந்தைப்பேறு கிட்டும். அவர்கள் நல்ல மக்களாகவும் இருப்பார்கள். தென்மேற்கு அறையின் தென் மேற்கு மூலையில் ஜன்னல் இருந்தால் செல்வ இழப்பும், அதிகார பறிப்பும் நிகழும். சிலரது படுக்கை அறையே பலி பீடமாக உள்ளது என்று உறங்கவே அஞ்சுவார்கள். சிலரது வீட்டில் படுக்கை அறை எப்படி இருக்கிறது என்று பார்த்தலே போதும் அவர்களின் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமை எப்படி இருக்கும் என்று சொல்லி விடலாம்.

Bedroom Vastu Tips in Tamil: Dont make these mistakes in your bedroom

கட்டிலுக்கு ஏற்ற மரம்: வீட்டில் உள்ள மாஸ்டர் படுக்கையறையின் திசை வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்க வேண்டும். படுக்கையை மூலையில் அமைக்கக் கூடாது. கட்டிலின் 3 புறமும் நடக்கும் வகையிலும் தெற்கு புறம் குறைந்த காலியிடம் விட்டும் படுக்கையை அமைக்க வேண்டும். கட்டிலுக்கு ஏற்றதாக சந்தனமரம், தேக்கு, பூவரசு, மருது, கருங்காலி, மூங்கில், கோரை, தர்ப்பை போன்றவற்றால் மட்டுமே செய்தால் நல்லதென வாஸ்து சாஸ்திரம்.

நிம்மதியான உறக்கம் தரும் கட்டில்: கட்டில் தலைப்பகுதி சற்றே உயரம் வைத்தும், அப்பகுதிப் பலகை வட்டமாகவோ, செவ்வகமாகவோ, சதுரமாகவோ வேலைப்பாடுகளுடன் இருப்பது நல்லது. பலாமரம், மாமரம், வேம்பு, தேக்கு மரக்கட்டிலை உபயோகப்படுத்தினால் நல்ல உறக்கம் வரும். புத்துணர்ச்சியுடன் கண் விழிக்கலாம். மாம்பலகை கட்டில் குளிர்ச்சியையும், அமைதியையும், பலாமரப் பலகை நல்ல உறக்கத்தை தரும். வேப்பம் பலகை சூடு தணித்து மூல நோய், வெட்கை, அல்சர் எனப்படும் வயிற்று புண்களைக் குணப்படுத்தும்.

வாஸ்து சொல்லும் உண்மை: படுக்கைக்கு இந்த மரங்களை மட்டும் ஏன் பயன்படுத்த வேண்டும் என்று பலரும் கேட்கலாம். மற்ற பொருட்களைப் படுக்கையாக்கி உபயோகிக்கும்போது எதிர்விளைவுகள் ஏற்பட்டு நோய்வாய்ப் படுதல், தீவிரவாத குணமுடைய குழந்தைகள் உருவாவது, சண்டை சச்சரவுகள் அடிக்கடி வருவது போன்றவை நிகழும் என்றும் வாஸ்து நிபுணர்கள். ஊஞ்சல் போல கட்டில் செய்து படுப்பதும் இந்நாளிலும் பல வீடுகளிலும் உண்டு.

Bedroom Vastu Tips in Tamil: Dont make these mistakes in your bedroom

இந்த மரங்கள் வேண்டாம்: எரிந்து போன மரம், ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட மரம், ஏலத்தில் எடுத்த மரம், புயலால் சாய்ந்த மரம் ஆகியவற்றை உபயோகப்படுத்தக் கூடாது இதனால் வெறுப்பு, சஞ்சலம், கொலை வெறி, குடும்பத்தில் ஒற்றுமையின்மை ஆகிய கெடுபலன்கள் உபயோகிப்பவர்களை வந்து சேரும்.

நிம்மதி தரும் மெத்தைகள்: மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை என்று சொல்வார்கள். நிம்மதியாக உறங்கி விழித்து எழுவதற்கு
கட்டிலுக்கு மெத்தை வாங்கப் போகும் போது முதல் தேர்வாக இலவம் பஞ்சு மெத்தைகளை வாங்கலாம் என்று வாஸ்து கூறுகிறது. வாழை நார், சிறிது தேங்காய் நார் உபயோகப்படுத்தலாம் என மென்மையான பருத்தியை உபயோகப்படுத்துவது நல்லது. படுக்கை அறையில் இருந்து பார்த்தால் நீர்நிலை தெரியக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ரிசார்ட் எனப்படும் பொழுதுபோக்கு இடங்களில் ரிவர் வியூ, பால்ஸ் வியூ, டேம் வியூ, நீர்த்தேக்க பார்வை, கடல் காட்சி என ஆடம்பர பங்களாக்களில் வசிப்பவர்கள் பாதிப்பை அடைவார்கள். சில நாள்கள் தங்குவதில் தவறில்லை. குடும்பம் நடத்த ஏதுவானவையாக நீர்நிலை ஒட்டிய பகுதிகள் தவிர்க்கப்பட வேண்டும். கட்டாயம் எனில் ஒரு பால்கனியை அமைத்து பூஞ்செடிகள், சிம், கண்ணாடி அமைத்து பரிகாரம் செய்யலாம்.

Bedroom Vastu Tips in Tamil: Dont make these mistakes in your bedroom

செல்வ இழப்பு ஏற்படும்: தென்மேற்கு அறையின் தென் மேற்கு மூலையில் ஜன்னல் இருந்தால் செல்வ இழப்பும், அதிகார பறிப்பும் நிகழும். படுக்கை அறையின் ஜன்னல் திறந்தால் உயர்ந்த மரம், கம்பம், மின்மாற்றி டிரான்ஸ்ஃபார்மர் தெரியக்கூடாது. இதனால் வழக்கு, வியாஜ்ஜியம், விவாதங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஜன்னல்களை எப்போதும் மூடி வைத்திருக்க கூடாது. இதனால் செல்வ இழப்பும், நோய்களும் எளிதில் வரக்கூடும். அவ்வப்போது திறந்து மூடும் பழக்கத்தை கைக்கொள்ள வேண்டும்.

வெளிச்சம்: படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும். எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும். பொருளற்ற ஓவியம், படங்கள், மிருகங்கள் மோதிக்கொள்ளும் திரைச்சீலைகள் குடும்பத்தில் அமைதியை கெடுத்து விடும். படுக்கை அறையில் குழந்தைகள் படம், சந்தான கோபாலன் படம் ஆகியவை குடும்ப உறவை வலுப்படுத்தும் அலங்காரங்களாகும். படத்தை தூசி இன்றி துடைத்து வைப்பது அவசியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+