யானை முடி மோதிரத்தால் வரும் அதிர்ஷ்டம்.. இந்த விரலில்தான் போடணும்.. ஏற்றம் தரும் தங்கம் யானை மோதிரம்
சென்னை: வாழ்க்கையில் துவண்டு போயுள்ளவர்களுக்கும், நிதி நெருக்கடி, ஆரோக்கிய குறைபாடுகளால் சோர்ந்து போயுள்ளவர்களுக்கும் பரிகாரங்கள் கைகொடுத்து உதவுகின்றன.. அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்பதக்கவே, ராசிக் கல் மோதிரங்களை பலரும் அணிவார்கள்.. தங்கம், வெள்ளி மோதிரங்கள் போல யானை முடி மோதிரமும் சிறப்பு வாய்ந்தது.. இதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? இந்த மோதிரத்தை குருவுடன் தொடர்புபடுத்த என்ன காரணம் தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நவகிரகங்களில் குரு பகவானின் வாகனம் யானையாக கருதப்படுகிறது.. அதேபோல தங்கமும் குருவுக்கு உகந்ததாக உள்ளது.. எனவேதான் யானை முடியின் மகத்துவம் அதிகரித்துள்ளது..

அதுமட்டுமல்ல, கேது கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களை, யானை முடி மோதிரம் தடுக்கக்கூடிய அளவுக்கு சக்தி கொண்டதாம்.. அதேபோல, செய்வினை தோஷம் உள்ளவர்கள் யானை முடி மோதிரம் அணிய வேண்டும் என்று ஜோதிடர்களே அறிவுரையாக கூறுகிறார்கள்.
எப்படி அணியலாம்
முதல்முதலாக யானை முடி அணிபவர்கள், வியாழக்கிழமைகளில் குரு ஓரைகளில், குறிப்பாக வளர்பிறைகளில் இந்த மோதிரத்தை அணிவது சிறப்பாகும்.
ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் அணியலாம்.. அதிலும் வியாழக்கிழமைகளில் ஆங்கில தேதி 3,21,11, 29 தேதிகளில் பிறந்தவர்கள் யானை மோதிரம் அணியலாம்.. இந்த மோதிரத்தை நடுவிரலில் அணிய வேண்டும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
பலன்கள் என்னென்ன
வாழ்க்கை மேம்பட உதவுவதற்கு யானை முடி மோதிரம் தரும் நன்மைகள் ஏராளம். யானை முடி அணிவதால், உங்களை சுற்றியுள்ள துர்சக்திகள் விலகும்.. கண்திருஷ்டியை போக்க யானை முடி சிறந்த ஆபரணமாகும்.. அத்துடன், பில்லி, சூனியம், மாந்த்ரீகம் போன்றவற்றினால் ஏற்படும் தாக்கங்களை யானை முடி மோதிரம் தடுக்கக் செய்கிறது..
கெட்ட விஷயங்களையும் முன்கூட்டியே உணர்த்தக்கூடியது.. இம்மோதிரம் அணிந்திருப்போருக்கு குருவின் அனுக்ரஹம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. யானை போன்ற துணிச்சலும், பலமும் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
யார் யார் அணியலாம்
இயல்பாகவே, பயந்த சுபாவம் உள்ளவர்கள், கூச்ச சுபாவம் உள்ளவர்கள் யானை முடி மோதிரத்தை அணியலாம்.. இதனால், மனதில் தைரியம் ஊட்டப்படும்.. எப்போதுமே விரலில் யானை மோதிரம் அணிந்திருந்தாலும், அவ்வப்போது சாம்பிராணி புகையில் மோதிரத்தை காண்பிக்க வேண்டும். இதனால் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும்.
இந்த மோதிரத்தை அணியும்போது, இயல்பாகவே அசாத்திய துணிச்சலும், அபரிமிதமான நம்பிக்கையும் கிடைக்கும். விரலில் யானை முடி மோதிரம் அணிந்திருந்தாலே, எந்தவிதமான திருஷ்டியும் நெருங்காது.. மோதிரம் அணிந்துள்ளவர்களிடம் எதிரிகளும், முழுமையாக வந்து கட்டுப்படுவார்களாம்..
அதேபோல இரவில் சரியாக தூக்கம் இல்லாமல் இருந்தாலோ, இனம்புரியாத பயமும், கலக்கமும் சூழ்ந்திருந்தாலோ, யானை முடி மோதிரம் அணியலாம்.. இதனால் துர்சொப்பனங்கள் எதுவுமே நெருங்காது.. பயமும் முழுமையாக அகன்று விடும்.
புராணக் கதை
இதுகுறித்து புராண கதையும் சொல்லப்படுவதுண்டு.. சிவப்பெருமான், விநாயகரின் தலையை எடுத்துவிடுவார். பின்னர் பார்வதி தேவி வாதம் செய்ததுமே, கணேசனுக்கு யானையின் தலையை வைத்துவிடுவார். அப்போது முதல் விநாயகர் முழு முதற்கடவுளானார். அதனால்தான், யானை முடி மோதிரத்தை அணிவது நல்லது என்கிறார்களாம்..
இந்த யானை முடியானது, யானைகளை துன்புறுத்தாமல் கிடைக்கக்கூடிய பொருள்.. எனினும், இதற்கான லைசென்ஸ் பெற்றே எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
சஞ்சீவி மலையின் மர்மங்கள்: சித்தர்கள் வாழும் பர்வதமலையின் ஆன்மீக சிறப்புகள் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications