கழுத்தை முட்டுதா கடன் தொல்லை.. கொட்டை பாக்கு, வெற்றிலை போதுமே.. பாசிப்பருப்பில் சிம்பிள் பரிகாரம்
சென்னை: பரிகாரங்களை செய்வதால் மட்டுமே, கடன் பிரச்சனைகள் நீங்காது. அதேசமயம் எத்தகைய பரிகாரங்களை செய்தாலும், அந்த கடனை அடைப்பதற்கான முயற்சியையும் சேர்த்து மேற்கொள்ளும்போது தீர்வுகள் கிடைக்கும்.. அந்தவகையில், கழுத்தை நெரிக்கும் கடனிலிருந்து மீண்டு வருவதற்கான பல்வேறு எளிய பரிகாரங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒருசிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.
தீர்க்க முடியாத அளவுக்கு கடன் பிரச்சனையால் சிக்கி கொண்டிருப்பவர்கள், செவ்வாய்கிழமை காலையில் பூஜை செய்ய வேண்டும்.. விளக்கேற்றி வைத்து, பாசிப்பயறு அல்லது பச்சை பயிறுடன் வெல்லம் சேர்த்து பாயாசம் கலந்து வைத்து, வீட்டு தெய்வம், இஷ்ட தெய்வம், குலதெய்வத்திடம் பிரார்த்தனையை முழுமையாக சொல்லி வேண்ட வேண்டும். அதேபோல, பச்சைப்பயறு மற்றும் வெல்லம் சேர்த்து, பசு மாட்டுக்கு தருவதாலும், கடன்கள் விரைவில் அடையும்..

பச்சைப்பயறு பரிகாரம்
இதற்கு முன்தினம் இரவே 1 கைப்பிடி பாசிப்பயறு, 1 கைப்பிடி வெல்லம் எடுத்து, நீரில் ஊறவைத்துவிட்ட, மறுநாள் ஊறிய பாசி பருப்பை பசு மாட்டுக்கு தர வேண்டும். யாருக்கு கடன் உள்ளதோ அவர்கள்தான், இந்த உணவை தந்து, தங்களது கடன் பிரச்சனை நீங்க வேண்டும் என்று கோமாதாவிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். அல்லது வெறும் பச்சரிசியை மட்டும் ஊறவைத்து, மறுநாள் காலையில் சர்க்கரை, வாழைப்பழம் கலந்து பசுவிற்கு தரலாம்.
கல் உப்பு கொட்டைப்பாக்கு
அதேபோல, 2 வெற்றிலையை சுத்தமாக கழுவிவிட்டு, அதில் கல் உப்பை வைக்க வேண்டும். அதன்மீது கொட்டைப்பாக்கை வைத்து, வெற்றிலையை மடித்து, மஞ்சள் நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து விட வேண்டும். பின்னர் தாயாருக்கு தீபம் ஏற்றி வைத்து மனமார பிரார்த்திக்க வேண்டும். மறுநாள் காலை மீண்டும் வெற்றிலை கொட்டைப்பாக்கினை இதுபோலவே புதிய முடிச்சு கட்டி, மீண்டும் மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைக்க வேண்டும்.
இப்படி 3 நாட்கள் செய்வதால் கடன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். வெற்றிலையை மாற்றும்போது, அதிலுள்ள கல் உப்பினை நீரில் கரைத்து, யாரும் கால் படாத இடத்தில் கொட்டிவிட வேண்டும். அந்த பழைய வெற்றிலை மற்றும் கொட்டை பாக்கினை பசுமாட்டிற்கு தந்துவிடலாம்.
அரச இலை பிள்ளையார்
அதேபோல, அரச இலை பிள்ளையாரிடம் வேண்டுதலை சொல்லி பிரார்த்திக்கும்போது, அரச வாழ்வு கிடைக்கும் என்பார்கள் பெரியவர்கள். மஞ்சள் பிள்ளையாரிடம் உங்கள் வேண்டுதலை சொன்னால், விரைவில் கடனிலிருந்து விடுபடலாம்..சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று, புதன்கிழமைகளில் சக்கரத்தாழ்வார் சன்னிதியில், துளசி மாலை சாற்றி, 12 முறை, 12 வாரமும் வலம் வந்து பிரார்த்திக்க வேண்டும். இதுவும் கடனிலிருந்து மீள வழி தரும்..
குலதெய்வம் அறிந்தவர்கள், தங்களது பூஜையறையில் பவுர்ணமி தினத்தன்று, குலதெய்வத்தின் படத்தை அலங்கரித்து, அம்மனுக்கு பிடித்த படையல்களை வைத்து, தூப, தீபம், ஆரத்தி காண்பித்து கடன் தீரவேண்டும் என்று மனமுருகி வேண்டி கொள்ளலாம்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications