கழிவறையில் இந்த 5 பொருள் இருந்தால் பணக்கஷ்டம் வந்துருமாம்.. படிக்கட்டுக்கு அடியில் டாய்லெட் கட்டலாமா
சென்னை: ஒரு வீட்டின் ஆற்றலானது, குடும்பத்திலுள்ள நபரின் வாழ்க்கையையே பாதிக்கக்கூடியதாக அமைந்துவிடும். அதனால்தான் வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முதல் ஒவ்வொரு விஷயத்திலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
எப்போதுமே, வீட்டின் வாஸ்து அமைப்பு பாதிப்படைந்தால், குடும்பத்தில் ஆரோக்கியம் மற்றும் நிதி நிலைமை மோசமாக பாதிக்கப்படலாம்... அந்தவகையில், வீட்டின் அறைகள் ஒவ்வொன்றும் முக்கியமாகும். இதில், கழிவறை மற்றும் குளியலறைகள் குறித்தும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

வாஸ்து சாஸ்திரம்: கழிவறைகள் வட மேற்கு மூலையில், வீட்டிற்கு உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் அமைப்பது நல்லது. வட மேற்கு திசையில் அமைப்பதாக இருந்தால், வீட்டின் சுவரையும், சுற்றுச்சுவரை தொடாமல் வெளிப்புறத்தில் கட்டலாம். குறுகலான இடம் மட்டுமே இருக்கிறதென்றால், மேற்கு பகுதியில் கட்டலாம்.
ஆனால், கன்னி மூலை எனப்படும் தென் பகுதியில் வீட்டின் உள்ளேயும், வெளியேவும் கழிவறை கட்டக் கூடாது... அதேபோல, வீட்டின் மையப்பகுதியிலும் கழிவறை கட்டக்கூடாது.
கழிவறைகள்: வடகிழக்கு பகுதியிலும் வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் கழிவறை கட்டக்கூடாது. வீட்டிற்குள் நுழையும் கதவுக்கு நேராகவும் கழிவறை கட்டக்கூடாது. சமையலறை, பூஜையறை பக்கத்திலும் கழிவறை அமைக்கக்கூடாது. கழிவறையின் தரைத்தளம், வீட்டின் தரைத் தளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது..
அதேபோல, படிக்கட்டுகளுக்கு கீழே பூஜை அறை, சமையலறை போலவே குளியலறையும் கட்டக்கூடாது.. அதாவது, அன்றாட தேவைகளுக்கு நமக்கு பயன்படுத்தப்படும் எதுவாக இருந்தாலும் படிக்கட்டுகளுக்கு அடியில் கட்டக்கூடாது. எப்போதுமே படிக்கட்டின் கீழ்ப்பகுதி காலியாக இருக்க வேண்டும். செருப்புகள், ஷூ ரேக்குகள், வைத்திருந்தால் அவைகளை உடனடியாக எடுத்துவிட வேண்டும். படிக்கட்டுகள் எப்போதும் ஒற்றைப்படை எண்ணாக இருக்க வேண்டும். ஆனால், அந்த எண் பூஜ்ஜியத்துடன் முடிவடையக் கூடாது.
பக்கெட்டுகள்: குளியலறையில் உடைந்த கண்ணாடி, உடைந்த பக்கெட்கள், உடைந்த குழாய்கள், மங்கலான கண்ணாடி, அழுக்கு துணிகள், ஈரமான துணிகள் வைதிருப்பார்கள்.. இதெல்லாம் குடும்பத்தில் வறுமையை தந்துவிடுமாம். அதுபோலவே, அழகியல் தோற்றத்தை தரக்கூடிய சில போட்டோக்களை ஒட்டி வைத்திருப்பார்கள்.. சிலர் படங்களையும் வைத்திருப்பார்கள். ஆனால், இதில் கிழிந்த போட்டோக்கள் மட்டும் வைக்கக்கூடாதாம். இது குடும்பத்தில் பிரச்சனையை உண்டுபண்ணிவிடுமாம்.
அதேபோல, குளியலறையின் சுவர்கள் நீல நிறத்தை பூசுவது சிறப்பானதாகும்.. அது டைல்ஸ் பதிவதாக இருந்தாலும், நீல நிறத்தில் பதியலாம்.. குளியலறையில் பக்கெட்டுகள், மக்குகள், போன்றவையும் நீலநிறத்தில் பயன்படுத்தலாம்.. அதேபோல, வீட்டில் குளியலறையின் கதவுக்கு முன்னால் கண்ணாடியை வைக்கக் கூடாது என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications