பணப்பெட்டி எங்கே வைக்கலாம்? கடைகளில் இந்த திசையில் சேர் போடு உட்கார்ந்தால், பணம், மகிழ்ச்சி பெருகுமே
சென்னை: சொந்தமாக கடையை ஆரம்பித்து, அதில் நஷ்டம் வந்துவிடக்கூடும்.. என்ன காரணத்தால் இப்படி நடக்கிறது என்றே தெரியவில்லை என்று சிலர் சொல்வார்களே தவிர, அதற்கான வாஸ்து குறைபாடு விஷயத்திலும் கவனம் செலுத்த மாட்டார்கள். அந்தவகையில், பொதுவாக புதிதாக துவங்கிய ஒரு கடையில் வாஸ்து எப்படி இருக்க வேண்டும்? பணப்பெட்டி எங்கு வைக்க வேண்டும்? இதை சுருக்கமாக பார்ப்போம்.
எப்போதுமே ஒரு கடையை துவங்கினால், அதன் பாதிப்புகள் உடனே வெளியே தெரியாது, 21 வாரங்கள் அல்லது 21 மாதங்களுக்கு பிறகே அதன் பாதிப்புகள் தெரியவரும். அப்படி தெரியவரும்போது, உடனடியாக வாஸ்துவை சரிசெய்து கொள்ள வேண்டும். ஆனால், கடைகளை ஆரம்பிக்கும்போதே சரியான அமைப்பில் கடைகள் இருக்கும்படி பார்த்து கொள்ளலாம்.

வாஸ்து குறைபாடுகள்: உதாரணத்துக்கு ஒரு கடையின் நீளம், அதன் அகலத்தை விட 2 முதல் இரண்டரை மடங்கு குறைவாக இருக்க வேண்டும். எந்த திசை பார்த்த கடையாக இருந்தாலும், அந்த கடையின் வடகிழக்கு பகுதி என்பது, அதிக உயரமில்லாத, ஒரு பள்ளம் சார்ந்த நிகழ்வாக இருக்க வேண்டும். அமாவாசை தினங்களில் கடைகளுக்கு திருஷ்டி சுற்றி போடுவதால் கடைகளின் வாஸ்து குறைபாடுகள் நீங்கி வியாபாரம் செழிக்கும் லாபம் அதிகரிக்கும்.
கடையின் நுழைவு வாசல் தென் மேற்கு, வட மேற்கு ஆகிய திசைகளில் இருக்ககூடாது.. தென்கிழக்கு பகுதியில் வாசல்கள் இருப்பது மிகவும் விசேஷமானது. கடையின் பிரதான வாசல் கதவுகளையும், வடகிழக்கு மூலையில், வடக்கு நோக்கி இருக்க வேண்டும். கஸ்டமர்கள் மேற்கு மத்தியில் அமர்ந்து பேசுவதுபோல இருக்கலாம்.
வடக்கு பார்த்த கடையாக இருந்தால் வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். கேஷியல் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.. அதாவது பண பெட்டியை வலது புறம் அமைக்க வேண்டும். வடக்கு பார்த்து உட்கார நேர்ந்தால், பணப்பெட்டியை அவரது இடது கை புறம் இருக்க வேண்டும். தென் மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக உட்காரக்கூடாது.
தென்கிழக்கு பகுதி: தெற்கையும், மேற்கையும் பார்த்தது போல் எந்த வியாபாரத்தையும் செய்யக் கூடாது. முதலாளி உட்காரும் நாற்காலியும் தெற்கு பார்த்து இருக்கக் கூடாது. தென்கிழக்கு பகுதியில் நீர் தொடர்பான விஷயங்கள் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். பணப் பெட்டியை காலியாக இருக்கக்கூடாது.. கழிவறை, ஸ்டோர்ரூம், படிக்கட்டுகளில் இருந்து பார்க்க முடியாதபடி பணப் பெட்டி இருக்க வேண்டும்.
பணத்தை ஈர்க்கும் வகையில் பணத்தை பிரதிபலிக்கும் வகையில் உட்பக்கமாக கண்ணாடி வைக்க வேண்டும். வடகிழக்கு அல்லது மேற்கு போன்ற திசைகளில் கண்ணாடி வைப்பது நல்லது.
ஓட்டல்கள்: ஓட்டல் அல்லது உணவு விற்பனை செய்யும் கடைகளாக இருந்தால், சமையலறை வட மேற்கு திசையில் அமைக்க வேண்டும்.. அடுக்கு கடைகளில் தெற்கு அல்லது தென்மேற்கில் ஒரு படிக்கட்டு அமைக்கலாம். மேற்கு நோக்கிய கடைகளுக்கு வடகிழக்கு திசையில் படிகளை அமைக்கலாம்.
அதேபோல, வீடுகளுக்கு பக்கத்தில் கசாப்பு கடைகள் இருக்கக்கூடாது என்பார்கள்.. வீட்டுக்கு எதிரில் இறைச்சி கடைகள் இருந்தால், அந்த வீட்டிற்கு கண்டிப்பாக எதிர்மறை விளைவுகள் ஏற்படுமாம்.. அதேபோல், வீடுகளுக்கு எதிரில் தோல் தொழிற்சாலை இருந்தாலும், அந்த வீடுகளுக்கு கண்டிப்பாக எதிர்மறை விளைவுகள் வரும் என்கிறார்கள்.
அறிவுறுத்தல்: அதுமட்டுமல்ல, தண்ணீரை கலங்கப்படுத்துவது, பூமியை மாசுப்படுத்துவது, ரசாயனம் தொழிற்சாலை என இயற்கைக்கு எதிரான எந்த கடைகள், நிறுவனங்களாக இருந்தாலும், அதன் எதிரிலுள்ள வீடுகளுக்கு இன்னல்கள் எழலாம்.. எனவே, புதிதாக வீடு கட்டுபவர்கள் மேற்கண்ட கடைகள் இருந்தால், தங்கள் வீட்டின் அமைப்பை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications