இரு கர்ப்பிணிகள் ஒரே வீட்டில் இருக்கலாமா? குலதெய்வம் கோயிலுக்கு போறீங்களா? இது ரொம்ப முக்கியம்
சென்னை: குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம் என்ன? கர்ப்பிணிகள் குல தெய்வ வழிபாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன? குலதெய்வத்தின் போட்டோக்களை நாம் வீட்டில் வைக்கலாமா? குலதெய்வத்தை வணங்கினால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நாம் எந்த கடவுளை வணங்கினாலும், அதற்கு முன்பு வழிபட வேண்டிய தெய்வம் குலதெய்வம்தான் அனைத்து தெய்வங்களின் அனைத்து ஆசியும் கிடைத்து கொண்டே இருக்க வேண்டுமானால், குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியம்.. கர்ப்பிணிகளாக இருந்தால், கருவுற்ற முதல் மாதத்தில் குலதெய்வ வழிபாடு செய்யலாம்.

பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் முடி, குல தெய்வம் கோயிலில் சென்று மொட்டை போடுவது, காது குத்துவது, அவ்வளவு ஏன், வீட்டில் எந்த சுபகாரியங்கள் செய்தாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்கவேண்டும்...
அதேபோல, எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து விட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கையாகும்..
முக்கிய நாட்கள் முக்கியம்
குலதெய்வ கோயிலுக்கு வழிபாடு என்றாலே வருடம் ஒருமுறைதான் என்று நினைத்து கொள்கிறார்கள்.. தினம் தினம் கூட வணங்கலாம்.. குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதை தவறவிடக்கூடாது. அதிலும், அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களிலும் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
குலதெய்வ கோயிலுக்கு அடிக்கடி திருப்பணிகளை செய்து வரவேண்டும். உதாரணத்துக்கு விளக்கு எண்ணெய், திரி என முடிந்ததை தரலாம்.. குலதெய்வத்தின் போட்டோவை வீட்டில் வைக்கலாம். ஆனால், சாந்தமான குலதெய்வமாக இருந்தால், மட்டுமே வீட்டில் வைக்க வேண்டும்.. உக்கிரமான தெய்வமாக இருந்தால், வீட்டில் அந்த போட்டோவை வைக்கக்கூடாது என்பார்கள்.
2 கர்ப்பிணிகள்
ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணிகள் இருக்க கூடாது.. அதாவது, அண்ணி, நாத்தனார் உறவாக இருக்கவே கூடாது. அப்படியே இருந்தாலும், முகத்தை பார்த்து கொள்ளக்கூடாது. அப்படி பார்த்து கொண்டால், யாராவது ஒருவரின் குழந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுமாம். மற்றபடி சகோதரிகள் முறையில் கர்ப்பிணிகள் சந்தித்து கொள்ளலாம்.
அதேபோல, கர்ப்பிணிகள் கோவிலுக்கு செல்லக்கூடாது என்பார்கள். ஏனென்றால், கோவில்கள் பெரும்பாலும், குன்றுகளிலும் மலையிலும் இருக்கும் என்பதால், தூரம் கருதியும், கூட்டம் கருதியும், நோய் தொற்று ஏதாவது வரக்கூடும் என்றும், அல்லது ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிடும் என்பதற்காகவும்தான் கர்ப்பிணிகளை கோயில்களுக்கு செல்லக்கூடாது என்றார்கள்.
தவிர்க்கலாம்
ஆனால், இப்போது கர்ப்பிணிகள், படிக்கட்டுகள் குறைவாக உள்ள கோயிலுக்கு தாராளமாக செல்லலாம்.. எனினும், சுவாமி சிலைக்கு அருகில் எந்திரங்களை பிரதிஷ்டை செய்திருப்பார்கள் என்பதால், கோயிலுக்கு செல்வதை தவிர்க்கலாம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
சுப காரியங்கள் ஏதாவது செய்யும் முன்பு, குலதெய்வத்தை நேரில் தரிசிக்க முடியாவிட்டால், வீட்டின் வாசலில் நின்று, சூரியனை கும்பிட்டுவிட்டு உங்க வீட்டிற்கு எந்த திசையில் உங்கள் குலதெய்வம் இருக்கிறதோ, அந்த திசையை பார்த்து ஒரு தேங்காயை உடைத்து விட்டு, உங்கள் காரியத்தை துவங்கலாம்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications