இந்த 5 தப்பை தப்பித்தவறி செய்யாதீங்க.. வீட்டில் செய்ய வேண்டிய டாப் 5 விஷயம்.. மணி பிளான்ட் கவனியுங்க
சென்னை: தீபாவளி உட்பட எந்தவித பண்டிகைகளாக இருந்தாலும், அன்றைய தினங்களில் செய்யக்கூடாத சில செயல்களை முன்னோர்கள் விரிவாக எழுதி வைத்திருக்கிறார்கள்.. அதேபோல வீட்டிலுள்ள சில பொருட்கள் குறித்தும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதனை சுருக்கமாக பார்ப்போம்.
எப்போதுமே நாள், கிழமை என்றால், அன்றைய தினங்களில் மகாலட்சுமியின் வாசம் வீடு முழுவதும் பரவச்செய்ய வேண்டும். எனவே, வீட்டிலுள்ள சில பொருட்கள் வெளியே யாருக்கும் பரிசாக தரக்கூடாது.. அதேபோல, பிறரிடமிருந்து சில பொருட்களை வீட்டுக்குள் பரிசாக பெற்று வரக்கூடாது.

கருப்பு ஆடைகள்: அந்தவகையில், இதற்கு உலர்ந்த பழங்கள், இனிப்புகள், உடைகள், அழகான அலங்கார பொருட்கள், பானைகள், பாத்திரங்கள் போன்ற வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தாராளமாக பிறருக்கு பரிசாக வழங்கலாம்.
ஆனால், பண்டிகை நாட்களில் வாட்ச் பரிசாக தரவும் கூடாது, வாங்கவும் கூடாது.. சென்ட் போன்ற வாசனை திரவியத்தையும் பரிசாக தரக்கூடாது.. காரணம், இது வீட்டிற்குள் துரதிர்ஷ்டத்தை தந்துவிடுமாம்.
பரிசு பொருட்கள்: அதேபோல, கருப்பு ஆடைகளை பரிசாக தரக்கூடாது.. அப்படி தந்தால், குடும்பத்தில் மனஅமைதி குலைந்துவிடும். அதேபோல பிறருக்கு செருப்புகளையும், கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களையும் பரிசாக தரவும் கூடாது, வாங்கவும் கூடாது.
அதேபோல, நல்ல நாட்களில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன், வீட்டிலுள்ள சில பொருட்களையும் சுத்தம் செய்திருக்க வேண்டும்.. அந்தவகையில், மத புத்தகங்களை சரியாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். கடவுள்களின் சிலைகள், படங்களையும் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். ஒருவேளை உடைந்த சிலைகள் இருந்தால், அதை தீபாவளியன்று வெளியே தூக்கி போடக்கூடாது.
களிமண் விளக்குகள்: வீட்டில் பழைய வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் உள்ளிட்ட பாத்திரங்களையும், களிமண் விளக்குகளையும் சுத்தமாக வைக்க வேண்டும். இது நேர்மறை ஆற்றலை வீட்டுக்குள் கொண்டுவரும்.. நீர் தொடர்பான பொருட்கள், அதாவது நீரூற்றுகள், மீன் தொட்டிகள் போன்றவைகள் சுத்தமாக இருந்தால் செழிப்பை வீட்டிற்குள் கொண்டுவரும். தங்கம், வெள்ளி நகைகள், நாணயங்கள், பழைய நாணயங்கள், வரலாற்று பொருட்களையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
பச்சை செடிகள், துளசி, மணி பிளான்ட், கற்றாழை போன்றவை வீட்டிலிருந்து எறியக்கூடாது.அதேபோல உடைந்த கடிகாரத்தையும் வெளியே வீசக்கூடாது.
-
வைகாசி விசாகம் 2026: எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications