பீரோவை பூஜை அறையில் வைக்கலாமா? பெட்ரூமில் இப்படி வைக்கணும்.. பீரோவில் பணம் சேர பெஸ்ட் திசை இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீரோக்களில் பெரும்பாலானோர் பணம், நகைகளை சேமிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், சிலர் வாஸ்துவை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்.. இதனால் குடும்பத்தில் பாதிப்பும், நிதி சிக்கலும் ஏற்பட்டு விடுகிறது. தங்களுக்கு விருப்பமான அல்லது வசதியான இடங்களில் பீரோவை வைத்து கொள்வதால், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுகின்றன. பீரோ வைக்கும் திசை? பீரோவின் நிறம்? பீரோவின் உலோகம் என்ன என்பது குறித்தும் வாஸ்துவில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பாரக்கலாம்.

எப்போதுமே , வீட்டில் வடமேற்கு திசை அல்லது தென்கிழக்கு திசையில் பீரோ வைக்கக்கூடாது என்பார்கள்.. இதனால் தேவையில்லாத செலவுகள் ஏற்படுமாம்.. அதேபோல, கிழக்கு திசையிலும் பீரோ வைக்கக்கூடாது. இதனாலும் நிதி நிலைமை சீராகாது.

Spirituality bero pooja room

ஆரோக்கிய குறைபாடுகள்

ஒருவேளை தெற்கு பார்த்த வீடுகளில், வடக்கு சுவர் ஓரமாக, தெற்கு பார்த்து பீரோ வைத்திருந்தால், பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடும், மருத்துவ செலவும் அதிகரிக்குமாம்.. அதேபோல, மேற்கு பார்த்த வீடுகளில் கிழக்கு சுவர் சார்ந்து, மேற்கு திசையை பார்த்து வைத்தால், ஆண்களுக்கு ஆரோக்கிய குறைபாடும், மருத்துவ செலவும் அதிகரிக்கும் என்கிறார்கள்.

எனவே, குபேரனின் பார்வை விழக்கூடிய வடக்கு திசையே உரிய திசையாகும்.. வடக்கு திசை அல்லது கிழக்கு திசை பார்த்து பீரோ வைக்கலாம். கிழக்குப் பார்த்து பீரோவை வைத்தால், நிம்மதியும், லாபமும் பெருகும். அதாவது, பீரோ வடக்கு நோக்கி திறக்கப்பட வேண்டும்.. பீரோவை திறப்பவரின் முதுகு வடக்கு திசையை நோக்கியே இருக்க வேண்டும்..

தென்மேற்கு திசை

ஒருவேளை, தென்மேற்கு திசையை பார்த்தவாறு பீரோ வைத்திருந்தால் பணம் பெருகும்.. பீரோவின் பின்புறம் தெற்கு திசை நோக்கியும், முன்பக்கம் வடக்கு திசை நோக்கியும் இருக்கலாம்.

பூஜையறையில் பீரோ வைக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.. ஆனால், வாஸ்து சாஸ்திரப்படி பூஜை அறையில் வைக்க பரிந்துரைக்கப்படுவதில்லை.. அதேபோல பூஜை அறைக்கு அருகிலும் வைக்க கூடாது என்கிறார்கள்.. காரணம், பூஜையறை என்பது புனிதமான இடத்தில், பணத்தை சேமிக்கும் பீரோவை வைக்கக்கூடாதாம்... பீரோவை பூஜை அறைக்கு அருகில் வைத்தால், பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது..

பூஜையறையில் பீரோ

நேர்மறை ஆற்றல் நிறைந்த பூஜையறையில், பீரோவை வைத்தால், அந்த ஆற்றலில் பாதிப்பு ஏற்படலாம்.. எனவே, பீரோவை வைப்பதற்கென்றே தனியாக ஒரு இடத்தை ஒதுக்கிவிட வேண்டும்.

ஒருவேளை படுக்கையறையில் பீரோவை வைப்பதாக இருந்தால், நல்ல வெளிச்சம் வரும் ஜன்னலுக்கு அருகில் வைக்க வேண்டும். ஆனால், கண்ணாடி இல்லாத பீரோவாக இருக்க வேண்டும். காரணம், கண்ணாடியுடன் கூடிய பீரோவை, பெட்ரூமில் வைத்தால், அந்த கண்ணாடியில் படுக்கை பிரதிபலிக்க வாய்ப்புள்ளதாம்.. கண்ணாடியுடன் பீரோ இருக்கிறதென்றால், குறைந்தபட்சம், படுக்கைக்கு எதிரே பீரோவை வைப்பதை தவிர்க்கலாம்.
பணம் வைக்கும் பீரோ

பீரோவின் நிறம்

அதேசமயம், பணம் வைக்கும் பீரோ, எப்போதும் மரத்தால் அல்லது இரும்பினால்ஆனதாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பீரோவில் தான் செல்வம் பெருகும் என்பார்கள்.

பீரோவை வாங்குவதாக இருந்தால், எப்போதும் அடர் நிறத்தில் வாங்கக்கூடாது.. பீரோவின் நிறம் க்ரீம் அல்லது வெளீர் நிறத்தில் இருந்தால் செல்வம் சேரும்.. தென் மேற்கு பகுதி குபேர மூலை என்பதால், பீரோவை மட்டுமல்ல, லாக்கர் போன்ற பொருட்களை வடக்கு திசை நோக்கி வைக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+