குளியலறையில் தப்பித்தவறி இதை வெக்காதீங்க.. பாத்ரூமில் கண்ணாடி இருக்கா? பெட்ரூமில்? அப்ப இதை பாருங்க
சென்னை: நம்முடைய வீடுகளில் படுக்கையறை மற்றும் குளியலறைகளில் கண்ணாடியை பயன்படுத்தலாமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு உள்ளது.. இதுகுறித்து வாஸ்துவில் விரிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.. அதில் ஒருசிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.
பொதுவாக, வீட்டின் படுக்கையறைகள் தென்மேற்கு அல்லது தெற்கு அல்லது மேற்கு திசைகளில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும், வட கிழக்கு, தென்கிழக்கு திசைகளில் படுக்கையறையை அமைக்க கூடாது. காரணம், வடகிழக்கு திசை பிரார்த்தனை வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது.

படுக்கையறை: அதேபோல, படுக்கையறையின் சுவர்களுக்கு நீலம், பச்சை, மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட வண்ணங்களை தேர்ந்தெடுக்கலாம். இதனால் குடும்பத்தில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
படுக்கையறையில் கண்ணாடிகள் இருக்கலாம். ஆனால், வடகிழக்கு மற்றும் வடக்கு திசையில் கண்ணாடியை வைக்கலாமே தவிர கிழக்கு திசையில் மட்டும் கண்ணாடிகளை வைக்ககூடாது.. படுக்கைக்கு முன்பேயே கண்ணாடி வைக்கக்கூடாது. படுக்கையை பார்த்தவாறும் கண்ணாடி வைக்கக்கூடாது. கண்ணாடியின் பிரதிபலிப்பு படுக்கையில் விழாதபடி வைக்க வேண்டும். அல்லது இரவு தூங்கும்போது கண்ணாடியை துணியால் மூடிவைத்துவிட்டு, மறுநாள் காலையில் நீக்கிவிடலாம்.
வடிவங்கள்: அதேபோல செவ்வகம் அல்லது சதுர வடிவில் இருக்க வேண்டும். மற்ற வடிவங்களில் இருந்தால் ஆரோக்கியத்தில் குறைபாடு வந்துவிடும். 2 கண்ணாடிகளையும் ஒரே அறையில் வைக்கக்கூடாது.
குளியலறைக்குள், கண்ணாடிகளை பொருத்தி வைப்பது என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால், உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடிகளை வைப்பது துரதிஷ்டத்தை தந்துவிடும். பாத்ரூம் என்றில்லை, எந்த அறையிலுமே முகம் தெளிவாக தெரியாத அல்லது உடைந்த கண்ணாடிகளை வைப்பது எதிர்மறையான ஆற்றலை கொண்டுவந்து விட்டுவிடும்.
உடைந்த கண்ணாடிகள்: உடைந்த கண்ணாடியில் அதிகளவு எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும் என்பது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, பாத்ரூமில் கண்ணாடிகளை கவனமுடன் வைக்க வேண்டும். உடைந்த கண்ணாடியை போலவே, உடைந்த பக்கெட்டுகளையும் வீட்டில் வைத்திருப்பதும் எதிர்மறை ஆற்றலை ஈர்த்துவிடும்
அதேபோல, பாத்ரூமில், ஈரமான துணிகள், அழுக்கு படிந்த துணிகளையும் வைக்க கூடாது. இது வாஸ்து தோஷத்தையும், சூரிய தோஷத்தையும் உண்டாக்கிவிடுமாம்.. ஈரத்துணிகள் சனிபகவானுக்கு மிகவும் பிடித்தமானது என்பதால், குளியறையில் ஈரமான, அழுக்கு துணிகள் இருக்கவே கூடாது..
காலி பக்கெட்: காலி பக்கெட்டுகளையும் பாத்ரூம்களில் வைத்திருக்க கூடாது.. பக்கெட்டில் எப்போதுமே நீர்நிறைந்து இருக்க வேண்டும். அல்லது கொஞ்சமாவது தண்ணீர் இருக்க வேண்டும். காலி பக்கெட்டுகள், வீட்டிலுள்ள செல்வத்தையும் அதுபோலவே வைத்துவிடுமாம். பாத்ரூமுக்குள் செடிகள் இருந்தால், அதையும் வாட விடக்கூடாது. உலர்ந்து போகாமல் நீர்த்தன்மை இருந்தாலும், பணத்துக்கும் கஷ்டம் இல்லாமல் இருக்கும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
அதேபோல, கிழிந்த மற்றும் பிய்ந்துபோன செருப்புகளை பாத்ரூமில் வைக்கக்கூடாது. பாத்ரூம் என்றில்லை, வீட்டில் எங்குமே கிழிந்த செருப்புகளை வைக்கக்கூடாது.. இதுவும் எதிர்மறை ஆற்றலை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்கிறர்கள் வாஸ்து நிபுணர்கள். குழாயில் தண்ணீரும் சிந்தாமல் பார்த்துகொள்ளவேண்டும். ஒருவேளை குழாய்கள் ரிப்பேராகியிருந்தால், அதை உடனடியாக சரி செய்துவிட வேண்டும். தண்ணீரில் சிக்கனம் இருந்தாலே, அதிர்ஷ்டம் வீட்டிற்குள் தாராளமாக கிடைக்குமாம்.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications