ஈரம் சொட்ட விளக்கேற்றலாமா? ஈரத்துணி வீட்டில் இருக்கா? 90 நிமிடங்கள் விளக்கு எரியணுமா? சூப்பர் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரத்துணியை கட்டிக் கொண்டு பூஜைகளை செய்யலாமா? ஈரம் தோய்ந்த ஆடையுடன் விளக்கேற்றலாமா? ஈரத் துணிகள் இரவில் வைத்திருப்பதை பற்றி ஆன்மீகத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது? அனைத்தையும் சுருக்கமாக பார்ப்போம்.

விளக்கேற்றுவதற்கென்றே சில நடைமுறைகளை முன்னோர்கள் வகுத்துள்ளனர்.. விளக்கு எரிவது குடும்பத்துக்கு நல்லது என்றாலும், எந்த நேரத்தில் விளக்கு ஏற்ற வேண்டும்? எவ்வளவு நேரம் விளக்கு எரிய வேண்டும் என்று சொல்லி உள்ளனர்.

spirituality wet cloth 90 minutes lamp

தீபம் நேரம்: அந்தவகையில், மாலை 5:36 மணி முதல் 6:00 மணிக்குள்ளாக விளக்கை ஏற்ற வேண்டும். அதேபோல, ராகு, குளிகை, எமகண்டம் தவிர்த்து தீபம் ஏற்றலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், 90 நிமிடங்களுக்கு மேல் தீபத்தை எரிய விக்கூடாது.. 6 மணிக்கு தீபம் ஏற்றும் பழக்கம் இருந்தால், 7.30 மணிக்குள் அணைத்து விடலாம்.

ஒருவேளை பரிகாரத்திற்காக அணையா விளக்கு ஏற்றினால் மட்டும், நாள் முழுவதும் ஏற்றி வைக்கலாம்.. மற்றபடி, 90 நிமிடங்களுக்கு மேல் எங்குமே விளக்கு எரிய விட கூடாது.

வழிபாடுகள்: அதேபோல, பெற்றோருக்கு செய்யும் ஈமச்சடங்கிற்கு மட்டுமே, ஈரம் தோய்ந்த ஆடைகளுடன் வழிபாடு செய்வார்கள்.. இறை வழிபாட்டிற்கு, ஈரத்துடன் செய்யக்கூடாது..

ஈரத்துணிகளாக இருந்தால்கூட, அவைகளை நன்றாக பிழிந்து லேசாக உலர்ந்ததும், அதை அணிந்து கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். அல்லது ஈரம் சொட்ட சொட்ட துணி இருக்கிறது என்றாலோ, காயவைக்க முடியாத சூழல் இருந்தாலோ துணிகளை நன்றாக பிழிந்து 7 முறை நன்றாக உதறிய பிறகு, உடுத்திக் கொண்டு வழிபாடு செய்யலாம்.

அங்கபிரதட்சணம்: அதேசமயம், அங்கப்பிரதட்சிணம் செய்யும்போதும், அம்பாளுக்கு கரகம், பூச்சட்டி எடுக்கும்போதும் , மேலே மஞ்சள்நீர் ஊற்றிக் கொண்டு ஈரம் சொட்ட சொட்ட வழிபாடு செய்வார்கள்... இதனால் எந்த பாதகமும் இல்லை.. சாதாரண நாட்களில் ஈரத்துடன் வழிபாடு செய்யக்கூடாது.. அதேபோல, விளக்கு ஏற்றும்போதுகூட, ஈரத்துடன் செய்யக்கூடாது.. குளித்துவிட்டு ஈர உடம்புடன் அல்லது ஈர துணியை கட்டிக்கொண்டும் விளக்கு ஏற்ற கூடாது.

அதேபோல, எப்போதுமே ஈர துணிகளை வீட்டில் எந்த அறைகளிலும் ஊறவைத்திருக்க கூடாது. அப்படியே துவைத்தாலும், அதை உடனே உலர்த்திவிட வேண்டுமே தவிர, ஈரமாக வைத்திருக்ககூடாது.. அதிலும், இரவில் ஈரத்துணி வீடுகளில் இருந்தால், கஷ்டம், வறுமையை தந்துவிடுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+