Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'மதி' கெட்டுப்போச்சா? ஆவணி மாத சந்திர தரிசனம் நாளைக்கு மிஸ் பண்ணாதீங்க.. தீராத நோய்களும் தீரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எந்த நிலையிலும் மன வியாதிகளே வராது. செல்வவளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமையில் சந்திர தரிசனம் நம்முடைய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

சந்திர தரிசனம் தோன்றிய கதை: ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர். தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், 'மூன்றாம் பிறையாக' அமரும் பேறுபெற்றார்.

Chandra Dharisanam : Aavani matha chandra dharisanam importance and benefits

நோய்கள் நீங்கும்: வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி "சந்திர மௌலீஸ்வரராக" காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியையே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம். இந்த சந்திர தரிசனம் கிட்டும் போதெல்லாம் "ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம!" அல்லது "ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி" என்ற இடைவிடாமல் கூறி வந்தால் மனம் அமைதி அடையும். அறிவு ஒளி பெற்றுத் தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எக்காலதிலும் மன வியாதிகளோ, அறிவு மயக்க நிலையோ வராது.

முற்பிறவி பாவம் போக்கும்: மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். இந்த மூன்றாம் பிறையை பார்க்க மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ஆயுள் கூடும்: மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும். அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

ஆயிரம் மூன்றாம் பிறை: ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஆயிரம் மூன்றாம் பிறை , பார்த்தால் முக்தி என சொல்லப்படுகிறது. ஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே 'விதி கெட்டால் மதியைப் பாரு விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழி உணர்த்துகிறது. யாராவது அறிவீனமான செயல்களை செய்துவிட்டால் "மதி கெட்டவனே" என திட்டுவதை காணலாம். இதிலிருந்து ஒருவர் புத்திசாலியாக இருக்க சந்திரன் எவ்வளவு முக்கியம் என்பதை உணரலாம்.

ஆவணி மாத சந்திர தரிசனம்: ஆவணி மாதம் பிறக்கும் முதல் நாளில் சந்திர தரிசனம் சிறப்பானது. சூரியன் சிம்ம ராசியில் பிரவேசித்து இருக்கிறார், அமாவாசை முடிந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் சந்திரனும் சிம்ம ராசியில் பிரவேசித்து இருக்கிறார். சிம்ம ராசியில் புதன், சூரியன், சந்திரன் இணைந்திருப்பது சிறப்பானது அதுவும் சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் பிறை சந்திரனை தரிசனம் செய்வது சிறப்பு.

சந்திர தோஷம்: ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள‌ அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.
மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும்.

கண்பார்வை: சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.

மனகுழப்பங்கள் நீங்கும்: நாளைய தினம் ஆவணி மாதம் பிறக்கிறது. வெள்ளிக்கிழமை சுக்கிரபகவானுக்கு உகந்த நாளில் அம்மனுக்கு உகந்த அற்புதமான நாளில் சந்திரனை தரிசனம் செய்வது சிறப்பு. மாலை 6.27 மணி முதல் இரவு 7.27 மணி வரை மேற்குப் பகுதிகளில் சந்திரனை தரிசனம் செய்யலாம்.மூன்றாம் பிறை தரிசனம் வெறும் 'சந்திர தரிசனம் அல்ல". அந்த சிவபெருமானின் ஒரு பகுதியையே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம். இந்த சந்திர தரிசனம் கிட்டும் போதெல்லாம் 'ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம!" அல்லது 'ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி" என்று உச்சரித்தால் மனம் அமைதி அடையும்.

சந்திர காயத்ரி மந்திரம் :

ஓம் பத்மத் வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி
தன்னோ ஸோம ப்ரசோதயாத்
சந்திரன் ஸ்லோகம்:

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி என்று சொல்லி வணங்கலாம். இதன் மூலம் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி தெளிவடையும். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் காண்பவர்களுக்கு எந்த நிலையிலும் மன வியாதிகளே வராது. செல்வவளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+