செவ்வாய் பெயர்ச்சி 2023: சிம்மத்திற்கு இடம் மாறும் செவ்வாய்..சனியின் பார்வை.. யாருக்கு பாதிப்பு?
சென்னை: செவ்வாய் பகவான் நீர் ராசியான கடக ராசியில் நீச்ச நிலையில் இருந்து இடப்பெயர்ச்சியாகி ஜூன் 30ஆம் தேதி நெருப்பு ராசியான சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். கும்ப ராசியில் உள்ள சனியின் பார்வை சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகும் செவ்வாயின் மீது விழப்போகிறது. செவ்வாய் கிரகத்தின் இடப்பெயர்ச்சி, பார்வையால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
யுத்த கிரகங்கள்: செவ்வாய் வேகமாகப் பேசி விரைந்து முடிக்கும் கிரகமென்றால், சனி எதிரே இருப்பவரின் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்கு நிதானம் தரும் கிரகம். யுத்த கிரகங்கள் ஒன்றோடு ஒன்று ஒரே ராசியில் இணைந்திருந்தாலோ ஒன்றை ஒன்று பார்த்தாலோ பாதிப்பு அதிகமாகவே இருக்கும். அதுவும் நெருப்பு ராசியில் பயணம் செய்யப்போகும் செவ்வாய் மீது சனி பார்வை விழுவதால் சில ராசிக்காரர்களுக்கு சோதனை காலமாகவே இருக்கும்.

மேஷம்: உங்கள் ராசி அதிபதி செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பஞ்சம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். சனி பகவானின் ராசிநாதனின் நேரடி பார்வையில் விழுகிறார் செவ்வாய் பகவான். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். வெளி உணவுகளை சாப்பிட வேண்டாம். கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் தீர கணபதியை வணங்கவும். கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.
ரிஷபம்: உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப்போகிறார். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்கள் சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் பகவானால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். சனி பகவான் பார்வை விழுவதால் தாய் பத்திரங்களை சரிபார்த்து வாங்கவும். செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசம் படிக்க கவலைகளும் துன்பங்களும் பறந்தோடும்.
மிதுனம்: லாப ஸ்தான அதிபதி செவ்வாய் முன்றாம் வீட்டில் பயணம் செய்வது யோகமான அமைப்பாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்கால ராகு பலமாக இருக்கிறார். அனைத்திலும் யோகத்தை தரக்கூடியவர். தீய கிரகத்தின் பார்வை படுவதால் பயணங்களில் எச்சரிக்கை தேவை. மிதுன ராசிக்காரர்களுக்கு முடிவெடுப்பதில் குழப்பம் பிரச்னை வரும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பேச்சுவார்த்தை, உயர்ந்த பொருட்களை கொண்டு செல்லும் போது கவனம்.
கடகம்: உங்கள் ராசியில் இருக்கும் செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி இரண்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். வீட்டில் பேசும் போது விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பாதிப்புகளை தடுக்க முருகப்பெருமானை வணங்கி தினசரியும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

சிம்மம்: செவ்வாய் உங்கள் ராசியில் அமரப்போகிறார். ராசிநாதன் சூரியனின் தளபதி செவ்வாய் ராசியில் அமர்வதால் உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். வேலைப்பளுவும் அதனால் மன அழுத்தமும் ஏற்படும் காரணம் சனிபகவானின் நேரடி பார்வையும் உங்கள் ராசியில் பயணம் செய்யப்போகும் செவ்வாய் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்கி கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.
கன்னி: செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால். விரைய செலவுகள் அதிகரிக்கும். சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணி செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு செய்யுங்கள் எதிர்வாதம் செய்ய வேண்டாம். தினசரியும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.
துலாம்: உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது நன்மை தரக்கூடியது. செவ்வாய் லாபத்தில் அமர்வதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வாக்கில் கடினம் இருக்கும். நிதானம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம். பணவருமானம் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சனி பார்வை பெறுவதால் உடல் நலத்தில் அக்கறை தேவை. ரத்தக்கொதிப்பு இருப்பவர்கள் முன்னெச்சரிக்கை சிகிச்சை தேவை.

விருச்சிகம்: உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாம் வீட்டில் அமர்வதால் திடீர் யோகம் அமையும். சனி பகவான் செவ்வாயை பார்ப்பதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் உத்யோக ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது சிறப்பம்சம். உங்கள் செயல்களே உங்களுக்கு நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கும். உங்களின் சிறப்பான பணிகளால் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வை பெற்றுக்கொடுக்கும். சனியின் நேரடி பார்வையால் பயணங்களில் கவனம் தேவை. ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
தனுசு: உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் பயணம் செய்யப்போகிறார். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உடல் நலக்கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளது. முதுகு பிரச்சினைகள் வரலாம். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். கவலைகள் நீங்கும். அப்பாவின் தொழில் வருமானத்தில் லாபம் அதிகரிக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களே செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இது உங்களுக்கு சிறப்பானதல்ல வண்டி வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் செவ்வாய் மீது சனியின் பார்வை விழுவதும் சிறப்பானதல்ல. முருகன் கோவிலுக்கு செல்லுங்கள் செவ்வாய்கிழமை செவ்வாய் பகவானை வணங்கலாம் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.
கும்பம்: உங்கள் ராசியில் ஜென்ம சனி பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் ஏழாம் வீட்டில் செவ்வாய் நேரடியாக அமர்ந்து ராசியில் உள்ள சனியை பார்க்கிறார். வீட்டில் தம்பதியரிடையே பிரச்சினைகள் ஏற்படும். ஒரே வாகனத்தில் இருவரும் சேர்ந்து செல்வதை தவிர்க்கவும். செவ்வாய் ராசிக்கு ஏழாம் பார்வையாக பார்ப்பதால் திருமண விசயங்கள் கை கூடி வரும். கணவன் மனைவி சண்டை சச்சரவை தவிர்க்கவும். பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவை. செவ்வாய்கிழமைகளில் மவுன விரதம் இருப்பது நல்லது.

மீனம்: செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்வது நற்பலன்களை தரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வம்பு வழக்கு பிரச்சினை நீங்கும். ஆறாம் வீட்டில் செவ்வாய் அமர்வதால் எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். உங்களுக்கு மேன்மையும் யோகமும் கிடைக்கும். அதே நேரத்தில் ஆறாம் வீட்டில் செவ்வாய் மீது சனிபகவான் பார்வை படுவதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications