மதுரையில் களைகட்டிய பெண்கள் தேர் இழுக்கும் மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம் தேர்த் திருவிழா!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம் தேர்த் திருவிழா இன்று அதிகாலையில் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. பெண்கள் மட்டும் அம்மன் தேரை இழுக்கும் இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. அதேபோல மார்கழி மாதம் நடைபெறும் அஷ்டமி சப்பரத் தேர்த் திருவிழாவும் மிக முக்கியமான நிகழ்வாகும்.

மார்கழி மாதத்தின் தேய்பிறை அஷ்டமியில் இந்த சப்பரத் திருவிழா நடைபெறும். இந்த தேர்தலில் சுவாமியும் அம்மனும் மதுரை மாநகரை வலம் வருவர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து அதிகாலையில் சுவாமி- அம்பாள் இருவரும் பிரியாவிடையுடன் புறப்பட்டு 4 வெளி வீதிகளில் வலம் வருவர். அப்போது மக்களுக்கு உணவளிக்கும் வகையில் சிவாச்சாரியார்கள் அரிசியை தூவி வருவர்.
இந்த அரிசியை பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்று வழிபாடு செய்வர். இந்த நிகழ்வின் போது பெண்கள்தான், அம்மன் சப்பரத்தை இழுப்பதும் சிறப்பு அம்சமாகும். இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
-
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications